மலையாளபடமான ஹ்ரிதயம் பற்றி ஒரு கருத்து பரிமாற்றம்/உமாதமிழ்
சமீபத்தில்
Hot Star
OTT தளத்தில்நான் பார்த்த மலையாளபடமான ஹ்ரிதயம்
பற்றி ஒரு
கருத்து பரிமாற்றம்
இந்த படத்தின்
தொடக்கத்தில் ஒரு வசனம் வருது
. ரயிலில்
ஒரு கதாபாத்திரம்
சென்னைக்கு
செல்லும் ப்ரணவ் மோகன்லாலிடம் ‘4 ஆண்டுகள் முடிந்து சென்னையிலிருந்து ஊருக்குத் திரும்பி வரும்போது இதயத்தைப் பிழியும் ஒரு வலி ஏற்படும்’ என்று சொல்றது
சரியாக இருக்கிறது
இடைவேளையின் போது ப்ரணவ் மோகன்லால் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு ரயிலேறி செல்வார் அப்போது அந்த
கதாபாத்திரம் சொன்ன இதயத்தைப் பிழியும் அந்த வலியை நாம் பார்வையாளர்களாக உணர முடிகிறது
: கதை என்றால்
நாம் ஏற்கனவே பார்த்த வாழ்க்கையின்
மூன்று படிநிலைகளை சொல்லும் ‘ஆட்டோகிராஃப்’, ‘பிரேமம்’, ‘அட்டக்கத்தி’ பாணியில்
ஆனா இயக்குனர்
வினீத் ஸ்ரீனிவாசன்
தனக்கே உரிய பல
மனதை அள்ளும் காட்சிகளால் நல்ல திரைக்கதையுடன் அழகான
ஒரு படத்தை கொடுத்துள்ளார்
என சொல்லலாம்.
+2 முடித்துவிட்டு
கேரளாவிலிருந்து சென்னைக்கு வந்து ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்கிறார் அருண் நீலகண்டன் (ப்ரணவ் மோகன்லால்)
. கல்லூரில்
சேர்ந்த சில நாட்களிலேயே தர்ஷனா (தர்ஷனா ராஜேந்திரன்) என்ற பெண்ணிடம் காதல்
சீனியர்களுடனான மோதல், புதிய நண்பர்கள், காதல்
ஆனால் அவரது
வாழ்க்கை எதிர்பாராத சூழலில் தர்ஷனாவுடன் ஏற்பட்ட காதல்
முறிவால் மாற அதன் பின் . விரக்தியின் உச்சிக்கு செல்லும் ப்ரணவின் .பின்னர் அவரின் நடவடிக்கைகள்
படிப்படியாக மாறி ஜூனியர்களை
ராகிங் , தர்ஷனாவை வெறுப்பேற்ற வேண்டாவெறுப்பாக வேறொரு பெண்ணை காதலிக்கிறார், குடிக்கிறார்
ப்ரணவின்
வாழ்க்கை செல்வா என்ற சகநண்பனின் மரணத்தினால் புத்துயிர்
பெறுகிறது. மாறும் ர் அவரது வாழ்க்கை எதை நோக்கிச் செல்கிறது என்பதே ‘ஹ்ரிதயம்’ படத்தின் மீதிக்கதை.
நாயகனாக
ப்ரணவ் மோகன்லால். முதல்முறையாக நடிப்புக்குத் தீனி போடும் ஒரு நல்ல
கதாபாத்திரம்.
படம்
முழுக்க இவர் தன்னுடைய நடிப்பு பாடி லாங்வேஜால் நம் மனதில்
இடம்பிடிக்கிறார். ப்ரணவ்வின் முதல் காதலியாக நடித்திருக்கும் தர்ஷனா ராஜேந்திரனின் நடிப்பு அருமை
பிரணவுடன்
ப்ரேக் அப் ஆகும்போது
கோபத்தை வெளிப்படுத்துவதாகட்டும், நாம் இவனை மிஸ் பண்ணிட்டோம் என காதலனின்
திருமணத்தின் போது அழுகையை அடக்கி அங்கிருந்து வெளியேறுவதாகட்டும் கண்களாலயே பேசுகிறார்.நம் மனதை அள்ளுகிறார்
தன்னை மாற்றி
கொள்ளும் பிரணவ் சொந்த ஊர் சென்று போட்டோ கிரபராக மாற
அப்போது கல்யாணி
ப்ரியதர்ஷனுடன் காதல் பின் கல்யாணம்
கல்யாணி இன்னொரு
ஆங்கிளில் அழகு
அந்த முகத்தை பார்த்து கொண்டே இருக்கலாம் போல
ப்ரணவ்வின் நண்பராக வரும் அஷ்வத் லால், அஜு வர்கீஸ், காளேஷ் ராமானந்த் என அனைவரும் குறை
சொல்ல முடியாத நடிப்பை வழங்கியுள்ளனர்.
வழக்கமாக
வினீத் ஸ்ரீனிவாசன் படங்களில் சென்னை ஒரு பகுதியாக இடம்பெறுவது வழக்கம்
. அது
இப்படத்தில் ஒரு படி மேலாக சென்று சென்னை ஒரு கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறது
. அந்த
அளவுக்கு சென்னையையும் அதன் மனிதர்களையும் மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்
வினீத் ஸ்ரீனிவாசன்.
பல காட்சிகள்
உயிர்ப்பு
சாதரணமாக வாழ்க்கையின் மூன்று படிநிலைகளை
காட்டும்போது கதாபாத்திரங்களில் பெரிதளவு மாற்றங்கள் இல்லை
ஆனால் அந்த
பாத்திரங்கள் காட்டும் முதிர்ச்சி நம்மை வியக்கவைக்கிறது.
உதாரணமாக
ஆரம்பித்த
வேகத்தில்
முடிவுக்கு வரும் ப்ரணவ் - தர்ஷனா காதல் இவர்களது இருவரது
இருண்ட பக்கங்களையும் வெளிக்கொண்டு வருவதை நன்றாக காட்சிப்படுத்திய விதம் அருமை
. பெரிய
ட்விஸ்ட்கள், திருப்பங்களோ எதுவும் இல்லாமல் ஒரு சுவாரஸ்யமான நல்ல கதையை
படமாக்கியிருக்கிறார்
வினித்
: படத்தில்
குறைகள்இல்லாமல் இல்லை
எப்போதும் விறைப்பாக, சீனியர்களை ராகிங் செய்துகொண்டும், குடித்துக் கொண்டும் இருக்கும் ப்ரணவ் திடீரென ஒரு நாள் தன் ரூம்மேட்களிடம் சண்டை போட்டு விட்டு மறுநாள் முதல் நன்கு படிக்கும் மாணவனாக மாறுவது
இந்த திடீர் மாற்றத்துக்கான காரணம் சரியாக
சொல்லப்படவில்லை. படத்தின்
நீளம். அதிகம்
இரண்டாம்
பாதி சலிப்பு ஏற்பட அதான் காரணம்
எடிட் செய்திருக்கலாம்
. செல்வா
கதாபாத்திரம் ப்ரணவ் வாழ்க்கையில் வந்தவுடனே இப்படிதான் கதை என நமக்குத்
தெரிந்துவிடுவதால் பின்னர்
வரும் காட்சிகளில் சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடுகிறது
ஒளிப்பதிவு,
எடிட்டிங் ,ஒலிப்பதிவு மற்றும் இசை நன்று
இந்த படத்தை பார்க்கும் போது நமது உங்கள்
கல்லூரி வாழ்க்கையின் நாட்களை திரும்பிப் பார்க்க நேரிடும்
ஒரு அந்த
நான் நினைவுகள் அசைபோட அவசியம் பார்க்க வேண்டிய படம் ‘ஹ்ரிதயம்’.
---உமாதமிழ்
Comments