வெங்காயத்துடன் வேர்கடலை சேர்த்து இப்படி ஒரு சுவையான சட்னி

 

 வெங்காயத்துடன் வேர்கடலை சேர்த்து இப்படி ஒரு சுவையான சட்னி


தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என்று செய்து போர் அடித்தவர்களுக்கு விதவிதமான சட்னிகள் செய்து பார்க்க தோன்றும். வெங்காயத்துடன் வேர்க்கடலை சேர்த்து செய்யப்படும் இந்த சட்னி ரொம்பவே வித்தியாசமான சுவையுடன் நிச்சயம் இருக்கும்

.வெங்காய வேர்க்கடலை சட்னி செய்ய தேவையான பொருட்கள்: 
வெங்காயம் – 3, கடலைப் பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன், பெரிய தக்காளி – ஒன்று, வேர்க்கடலை  அரை கப், வர மிளகாய் – 4, தேங்காய் துருவல் – 3 டீஸ்பூன், புளி – சிறு கோலிகுண்டு அளவு, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு இணுக்கு, உப்பு – தேவையான அளவு.


வெங்காயம் வேர்க்கடலை சட்னி செய்முறை விளக்கம்: முதலில் வேர்க்கடலை பச்சை வேர்க்கடலை ஆக இருந்தால் அதனை ஒருமுறை வாணலியில் நன்கு வறுத்து ஆற வைத்து கொள்ளுங்கள். ஆறிய பின்பு அதில் இருக்கும் தோல் நீக்கி ஒரு டப்பாவில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். இது போல சட்னி செய்யும் பொழுது சட்டென எடுத்து பயன்படுத்துவதற்கு சுலபமாக இருக்கும்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்து கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விட வேண்டும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடலை பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும். கடலைபருப்பு பொன்னிறமாக வறுபட்டதும், வர மிளகாய் சேர்த்து வறுக்க வேண்டும். வர மிளகாய் லேசாக வறுத்தால் போதும். பின்பு பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து லேசாக வதக்கி விடுங்கள்.


வெங்காயம் கண்ணாடி பதம் வரும் பொழுது பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளித் துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம், தக்காளி பாதி அளவிற்கு நன்கு வதங்கியதும் அதில் நீங்கள் துருவி வைத்துள்ள தேங்காய் துருவலை சேர்க்க வேண்டும். தேங்காய் சில்லு சில்லாக நறுக்கியும் சேர்க்கலாம். பின்னர் நீங்கள் வறுத்து வைத்துள்ள வேர்க்கடலையை சேர்த்து வதக்குங்கள். இறுதியாக ஒரு சிறு கோலி குண்டு அளவு புளி சேர்த்து லேசாக வதக்கி அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். இந்த பொருட்களெல்லாம் நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இவற்றை சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.


பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தாளிக்கும் கரண்டியை வைத்து கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின்னர் கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் ஆகியவற்றை தாளித்து சட்னியுடன் சேர்த்து இறக்கினால் ரொம்பவே சூப்பரான சுவையான வெங்காய வேர்கடலை சட்னி தயார்! ப்ரோட்டின் சத்து நிறைந்துள்ள ஆரோக்கியமான இந்த சட்னியை இப்படி ஒரு முறை நீங்களும் வைத்துக் கொடுங்கள், எல்லோரும் உங்களை ஆச்சர்யமாகப் பார்ப்பார்கள்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,