என்னை இப்படி நடிக்க சொல்றீங்க..

 ஹீரோயின், என்னை இப்படி நடிக்க சொல்றீங்க.. கண்ணதாசனிடம் அழுத மனோரம்மா!


தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத குணச்சித்திர நடிகைகள் வரிசையில் மறைந்தாலும் தன்னுடைய பெயரை நிலைப்படுத்தி சென்றவர்தான் ஆச்சி மனோரமா. காமெடி கதாபாத்திரமாக இருந்தாலும் சரி சென்டிமென்ட் கதாபாத்திரமாக இருந்தாலும் சரி இவருக்கு நிகர் இவர்தான். மனோரமா இடத்தை பிடிக்க பல நடிகைகள் போட்டி போட்டாலும் இதுவரை அவரது இடத்தை யாருமே தொட்டு கூட பார்க்கவில்லை என்பதே உண்மை.

ஆரம்பத்தில் நாடக நடிகையாக அதுவும் நாடகங்களில் ஹீரோயினாகவே வலம் வந்தவர் மனோரமா. பெரும்பாலான நாடகங்களில் இவரை கதாநாயகியாக நடிக்க வைக்க பல கம்பெனிகள் போட்டா போட்டி போட்டனர். அப்படிப்பட்ட மனோரமாவுக்கு சினிமாவில் நடித்து எப்படியாவது பெரிய நடிகையாகி விடவேண்டும் என்ற ஆசையும் இருந்தது.

ஆனால் ஹீரோயினாக ஆசைப்பட்ட அவருக்கு முதன்முதலில் காமெடி கதாபாத்திரம்தான் கிடைத்ததாம். அதுவும் கவிஞர் கண்ணதாசன் தான் அவருக்கு இந்த வாய்ப்பை வழங்கி உள்ளார். இதனால் மிகவும் மனம் உடைந்து போன மனோரமா கண்ணதாசனிடம் அழுது புலம்பியுள்ளார்.

நாடகங்களில் ஹீரோயினாக நடித்த எனக்கு சினிமாவில் பெரிய நடிகையாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அப்போதுதான் கண்ணதாசன் தெளிவாக மனோரமாவுக்கு எடுத்துச் சொல்லியுள்ளார். ஹீரோயினாக இருந்தால் வெறும் மூன்று நான்கு வருடங்களில் சினிமாவை விட்டு காணாமல் போய் விடுவாய்.

அதே காமெடி வேடங்களில் குணச்சித்திர வேடங்கள் போன்றவற்றில் நடித்தால் வாழ்நாள் முழுக்க சினிமாவில் இருந்து கொண்டே இருக்கலாம் என தெரிவித்துள்ளார். அதன் பிறகுதான் ஹீரோயின் ஆசை எல்லாம் விட்டுவிட்டு சினிமாவில் வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டதாம். உயிர் பிரியும் வரை சினிமாவில் இருந்து நடிகைகளில் மனோரமாவும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இன்றும் அவரது இடத்தை நிரப்ப ஆளில்லை. கோவை சரளா போன்ற சில நடிகைகள் மனோரமா போல் அனைத்து கதாபாத்திரங்களில் நடித்தாலும் எல்லோருமே ஆச்சி மனோரமா ஆகிவிட முடியாது அல்லவா. இவ்வளவு ஏன் மனோரமா காலகட்டங்களில் காந்திமதி என்ற நடிகையும் மனோரமா அளவுக்கு பேசப்பட்டார். ஆனால் அடுத்த கொஞ்ச நாட்களிலேயே அவரும் காணாமல் போனார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,