சாலமன் பாப்பையா பிறந்தநாள் இன்று
சாலமன் பாப்பையா பிறந்தநாள் இன்று
சாமானியரின் தமிழ் ஆசான்... எளிய மக்களுக்கும் தமிழ் இலக்கிய ரசனையை ஊட்டிய பாவலர்...பாரதியின் கவிதை தொடங்கி கம்பனின் காவியம் வரை பாமரத் தமிழருக்கும் பக்குவமாய் அறிமுகம் செய்தவர்...
படித்தவர்களால் வகுப்பறைகளுக்குள்ளே சிறைப்படுத்தியிருந்த தாய் மொழியின் சங்க இலக்கியம் முதல் தற்போதைய அறிவியல் இலக்கியம் வரை கடைக்கோடி தமிழருக்கும் அறிமுகம் செய்துவைத்தவர்.
ஏதாவது ஒரு துறையில் பிரபலமாகிவிட்டால் பலரும் திரைத்துறையை நோக்கி செல்வதே வழக்கம். ஆனால், திரைத்துறையினரையே பட்டிமன்ற மேடையை நோக்கி ஓடி வர வைத்தவர்தான் மதுரை பேராசிரியர் சாலமன் பாப்பையா.
நன்றி: தினமணி
Comments