எலி வால் மாதிரி இருக்கும் முடி அடர்த்தியாக வளர

 

எலி வால் மாதிரி இருக்கும் முடி அடர்த்தியாக, தாறுமாறாக, கைக்கு அடங்காமல், வளர தொடங்கும். இந்த முருங்கைக்கீரை ஹேர் பேக் மட்டும் ட்ரை பண்ணி பாருங்க



- எலி வால் மாதிரி இருக்கும் முடி அடர்த்தியாக, தாறுமாறாக, கைக்கு அடங்காமல், வளர தொடங்கும். இந்த முருங்கைக்கீரை ஹேர் பேக் மட்டும் ட்ரை பண்ணி பாருங்க.

- சில பேருக்கு முடி மேலே கொஞ்சம் அடர்த்தியாக இருக்கும். கீழே போகப் போக ரொம்பவும் மெலிந்து காணப்படும். பார்ப்பதற்கு எலிவால் போல. நம்முடைய அழகை குறைத்து காட்டும் இப்படிப்பட்ட மெல்லிசாக முடி இருப்பவர்கள், அடர்த்தியாக முடி வளர என்ன செய்ய வேண்டும். நிறைய செலவு செய்ய வேண்டாம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த ஹேர் பேக்கை ட்ரை பண்ணி பாருங்க. வாரம் ஒரு முறை இந்த ஹேர் பேக்கை போட்டுவர, மூன்று மாதத்தில் உங்களுடைய தலைமுடியில் வித்தியாசத்தை பார்க்க முடியும். ஹேர் பேக்கை எப்படி தயாரிப்பது தெரிந்து கொள்வோமா
இந்த ஹேர் பேக்கை தயாரிக்க தேவையான பொருட்கள். தேங்காய் பால், கொஞ்சம் துளசி இலைகள், கொஞ்சம் முருங்கைக்கீரை இலைகள், அவ்வளவு தான்.(உங்களுடைய முடிக்கு ஏற்ப இந்த மூன்று பொருட்களையும் நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.) உதாரணத்திற்கு 2 கைப்பிடி அளவு தேங்காய் எடுத்துக் கொண்டால், 20 துளசி இலைகள், 1 கைப்பிடி அளவு முருங்கைக்கீரை நமக்கு தேவைப்படும்.
தேங்காயை மிக்ஸியில் போட்டு அரைத்து திக்கான தேங்காய் பால் எடுத்துக் கொள்ளுங்கள். திப்பியை வடிகட்டிவிட்டு திக்கான தேங்காய் பாலை மட்டும் தயாராக இருக்க வேண்டும். அதன் பின்பு அதே மிக்ஸி ஜாரில் துளசி இலைகளையும், முருங்கைக் கீரையையும் போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு விழுது போல இதையும் அரைத்து, வடிகட்டிக் கொள்ளலாம். இதை அப்படியே பயன்படுத்தினாலும் தவறு கிடையாது. இருப்பினும் தலையில் அப்ளை செய்யும்போது திப்பி திப்பியாக இருக்குமென்றால் வடிகட்டி கொள்வது சிறப்பாக இருக்கும்.
இப்போது ஒரு சிறிய பௌலில், முதலில் தேங்காய்ப்பாலை தேவையான அளவு ஊற்றிக்கொண்டு, மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் துளசி முருங்கைக் கீரை விழுதை, தேங்காய் பாலில் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள். நமக்கு தேவையான ஹேர் பேக் தயாராகிவிட்டது. இந்த ஹேர் பேக்கை தலையில் மண்டையோட்டில் படும்படி நன்றாக தேய்த்து லேசாக மசாஜ் கொடுங்கள். அதன் பின்பு தலைக்கு மேலே, தலை முடி கீழ் நுனி பாகம் வரை, இந்த ஹேர் பேக்கை அப்பளை செய்து அப்படியே கொண்டை கட்டி 30 நிமிடங்கள் ஊறவைத்து விடுங்கள். அதன் பின்பு நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு உங்களுடைய தலையை நன்றாக அலசி விடுங்கள். (திக்கான தேங்காய்ப்பால், முருங்கைக் கீரை விழுது, துளசி விழுது, இந்த 3 பொருட்களையும் ஒன்றாக கலந்து தலையில் தேய்க்க வேண்டும் அவ்வளவுதான்.)
ஒருமுறை இந்த ஹேர் பேக்கை பயன்படுத்தும்போது வித்தியாசம் தெரியும். உங்களுடைய முடி எவ்வளவு ஷைனா சாஃப்டா சில்கியா அழகா இருக்குன்னு. ஆனால் ஒரு முறை முடியில் போட்ட உடனேயே முடி வளராது. வாரத்தில் 1 நாள் கட்டாயம் இந்த ஹேர் பேக்கை தலைமுடிக்கு அப்ளை செய்ய வேண்டும். முடிந்தால் உங்களுக்கு முடி உதிர்வு ரொம்ப ரொம்ப அதிகமா இருக்கிறது என்றால் வாரத்தில் 2 நாட்கள் இந்த ஹேர் பேக்கை முயற்சி செய்து பாருங்கள். 10 முறை இந்த ஹேர் பேக்கை தலையில் போட்டு வர உங்களுக்கே நல்ல வித்தியாசம் தெரிய தொடங்கும்.
மூன்றே மாதங்களில் உங்களுடைய மண்டையோட்டில் முடி இல்லாத இடங்களில் முடி வளரத் தொடங்கும். இடுக்கமாக நெருக்கமாக அடர்த்தியான முடி வளர்ச்சியை உணர்வீர்கள். முடி உடையாமல் அடிபாகம் வரை ஒரே மாதிரி சீராக வளரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு இந்த டிப்ஸ் பிடித்திருந்தால் உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

Thanks deiveegham. Com

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,