சாயம் வெளுத்த தாமரை


 தமிழ்நாட்டிலேயே 3வது பெரிய கட்சி நீயா? நானா? என்று காங்கிரசும் பாஜகவும் மல்லுக்கட்டி கொண்டிருக்க இன்னொரு விஷயம் வெளிவந்துள்ளது.. அதை வைத்து பார்க்கும்போது, எங்கு பலம் வாய்ந்த கட்சி என்று பாஜக சொல்லியதோ, அங்கேயே சறுக்கலை சந்தித்துள்ளது.. அதற்கான கள நிலவரமும் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. அதிமுக படுதோல்வியை தழுவியுள்ளது..

அதன் கூட்டணியிலிருந்து பிரிந்த பாஜகவும் ஓரிரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளதே தவிர, சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியை பதிவு செய்யவில்லை...

செல்வாக்கு மிக்க கன்னியாகுமரியில் மட்டுமே அதிக வார்டுகளில் வென்றுள்ளது... ஆனால், 2011 தேர்தலுடன் இந்த தேர்தலை ஒப்பிட்டு பார்த்தால், 1% கூட பாஜக வளரவில்லை என்பதே உண்மை. ஆனால் அக்கட்சி தலைவர்கள் அப்படி சொல்லவில்லை.. தேர்தலுக்கு முன்பே பாஜக தமிழகமெங்கும் வளர்ந்துவிட்டதாக சொன்னவர்கள், இப்போது, மூன்றாம் பெரிய கட்சியே நாங்கள்தான் என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர்.. ஆனால் நாங்கள்தான் 3வது கட்சி என்று காங்கிரஸ் மல்லுக்கட்ட ஆரம்பித்துள்ளது..


சாயம் வெளுத்தது

 இப்படி இருகட்சிகளுக்கும் வார்த்தை மோதல் நடந்து வரும் நிலையில், உண்மையிலேயே பாஜகவின் சாயம் கோவையில் வெளுத்துள்ளதே என்பதே உண்மை.. முதலில் அதிமுகவின் பிடியில் இருந்து கொங்கு மண்டலம், திமுகவுக்கு லட்டு போல நழுவி விழுந்துள்ளது.. இதைவிட தரமான பதிலடியை அதிமுகவுக்கு திமுகவால் தர முடியாது.. அதிமுகவே சுருண்டு கிடக்கும்போது, பாஜகவுக்கு பெரும்பாலான இடங்களில் டெபாசிட் காலி உள்ளது..


கோவை மாநகராட்சி கோவை மாநகராட்சியின் உள்ள 100 வார்டுகளில் 86 இடங்களிலும் டெபாசிட்டை இழந்திருக்கிறது பாஜக.. மற்ற இடங்களிலும் சிங்கிளி டிஜிட் வாக்குகளை பெற்றுள்ளது.. சில இடங்களில் ஒரேயொரு இலக்கையே பெற்றுள்ளது.. கோவை மாநகராட்சியில் பாஜக போட்டியிட்ட 97 வார்டுகளில் 86 வார்டுகளில் டெபாசிட்டை இழந்துள்ளது பாஜக.. 99 இடங்களில் போட்டியிட்ட அதிமுகவோ, 21 வார்டுகளில் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளது..

இத்தனைக்கும் கடந்த தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில், வெற்றி பெற்ற நிலையிலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலிலாவது ஓரளவு வாக்கு சதவீதம் இருந்தது.. இதற்கே பாஜகவை கையில் பிடிக்க முடியவில்லை.. இந்த வாக்கு சதவீதத்தை கணக்கு போட்டுதான், அதிமுகவையே டேமேஜ் செய்து மேலே வர பிளான் போட்டது.. இந்த வாக்கு சதவீதத்தை கணக்கு போட்டுத்தான் திமுகவுக்கு மாற்று இனி நாங்கள்தான் என்பதை வலிய பதிவு செய்து வந்தது


கணக்கு போட்ட பாஜக இந்த வாக்கு சதவீதத்தை கணக்கு போட்டுதான், தனியாகவே இந்த முறை தேர்தலை சந்தித்தது.. இந்த வாக்கு சதவீதத்தை கணக்கு போட்டுதான், "கோவையில் ஒரு இடத்தில் பாஜக தோற்றால்கூடதன்னுடைய எம்எல்ஏ பதவியையே ராஜினாமா செய்வதாக வானதி சீனிவாசன் கூறியிருந்தார். இந்த வாக்கு சதவீதத்தை கணக்கு போட்டுதான், கொங்கு மண்டலத்தை தனி நாடாக்க வேண்டும் என்ற பிரச்சனையை அவர்களாகவே திடீரென உருவாக்கினார்கள்.


டெபாசிட் இப்படிப்பட்ட அதீத நம்பிக்கைகள் எல்லாம் ஒன்றுசேர்ந்துதான், இப்போது அக்கட்சிக்கு டெபாசிட்டை இழக்க வைத்துள்ளது என்பதே கள நிலவரம்.. தேர்தல் நடைமுறைகளில் வெற்றி, தோல்வி என்பது சகஜம்தான் என்றாலும், தனிநாடு கேட்டு பிரிவினையை உண்டாக்க நினைத்த சிலருக்கு, "இது தமிழ்நாடு, அதிலும் எங்கள் தமிழ்நாடு.. அதிலும் ஒற்றுமை நிறைந்த தமிழ்நாடு" என்ற நெத்தியடி பதிலை, இந்த தேர்தலில், பாஜகவின் தலையில் ஓங்கி அடித்து சொல்லப்பட்டுள்ளது...!

courtesy:tamiloneindia.com


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,