வாழ்தல்இனிது
நினைவுகளும்
கற்பனைகளும்
எழுத தூண்டுகின்றன .
கற்பனைகளின்
வடிவங்கள்
பிரம்மனின் படைப்புகளாக
அதிசயிக்கிறது.
நினைவுகள்
நிஜங்களின்
சுடுதல்களாக
கண்ணீரை சொறிகிறது.
நிழல்களை
துரத்த விரும்பி இங்கு
நிஜங்களை
வெறுக்கின்றனர்.
கற்பனைகளுக்கு
உயிர் கொடுத்து
என் சோகங்களை
ஆற்றினேன்.
இவன் மன வியாதிக்காரன்
என அழைத்து
நண்பர்கள்
பறந்தனர்.
கனா காணும் இவன்
நமக்கு
லாயக்கற்றவன்
என காதலிகளும்
தொலைந்தனர்.
இந்த முரண்பாடுகளில்
நான் பயணப்பட
கற்பனைகளின்
பிரசவங்கள்
என்னை மனிதனாக
ஆட்கொள்வதால்..
பயணிக்கிறேன்.
அந்த சுகமான அனுபவங்களை தேடி.
#வாழ்தல்இனிது
உமாதமிழ்
Comments