அரசு பள்ளியில் குழந்தை உரிமை பயிற்சி
அரசு பள்ளியில் குழந்தை உரிமை பயிற்சி.
Oxfam India நிறுவனத்தின் சார்பாக சென்னை உள்ள அரசு 10 பள்ளிகளில் குழந்தைகளுக்கான உரிமைகளை பற்றிய பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகின்றனர்.
தற்போது ஏழு கிணறு அரசு முஸ்லிம் உயர்நிலைப்பள்ளி, கொடுங்கையூர் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் தியாகராஜா நகர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளிகளில் ஐக்கிய நாடுகள் குழந்தைகளின் உரிமைகளுக்கான உடன்படிக்கையில் (UNCRC) எடுக்கப்பட குழந்தைகளுக்கான உரிமைகளை தெளிவாக விளக்கப்பட்டது.
குழந்தைகளின் அடிப்படை உரிமைகளான 1.வாழ்வதற்கான உரிமை, 2.வளர்வதற்கான உரிமை, 3.பாதுகாப்பிற்கான உரிமை, மற்றும் 4.பங்கேர்ப்பிற்கான உரிமை ஆகிய நான்கு உரிமைகளை குழந்தைகளுக்கு என்னவெல்லாம் சொல்கிறது என்பதை விளையாட்டு மூலம் பயிற்சி அளித்தனர்.
குழந்தைநல ஆர்வலர் வழக்கறிஞர் திருமதி கோமளா சிவக்குமார் ,குழந்தைநல ஆர்வலர் திரு.B.செந்தில் மற்றும் குழந்தைநல ஆர்வலர் வழக்கறிஞர் திரு தென்பாண்டியன் ஆகியோர் குழந்தைகளோடு குழந்தைகளாக மாறி பயிற்சி அளித்தனர்
குழந்தைகள் அவர்களின் உரிமைகளை தெரிந்துக்கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.பயிற்சியின் இறுதியில் கலந்துக்கொண்ட கொண்ட குழந்தைகளுக்கு சாக்லேட்டுகள் வழங்கப்பட்டது.
Comments