கரடி பொம்மை எனக்கு விரோதி

 


மழையில் நனைவதென்பது

எனக்கு பிடிக்காது

இன்று மழைக்காய்

காத்திருக்கும் 

சிறு பிள்ளையென

மாறி போகிறேனடி  

உனக்கு  மழை 

பிடிக்கும் என்பதால்


கடல் அலைகளில்

கால் நனைக்க

ஒரு போதும் 

விரும்பியதில்லை

மனம்

இன்று உன் 

விரல் கோர்த்து

விளையாட 

ஏங்குகிறேனடி

உனக்கு பிடிக்கும்

என்பதால்


இரவில் பனி

தனிமையில்

இனிமை என

ஒவ்வொன்றும்

உனக்கு பிடிக்கும்

என்பதால்

உனக்கே உனக்காய்

ரசிக்கும் என் மனம்


இரவில் உன் 

மார்போடு

கட்டியணைத்து

உறங்கும் இந்த

கரடி பொம்மையை 

மட்டும் ஜென்ம

விரோதியாய்

பார்க்கிறதடி


ஏன் தெரியுமா 

எனக்கு மட்டுமே

சொந்தமான

இடத்தை அது 

ஆக்கிரமித்து 

இருப்பதால் ! 

நித்யஸ்ரீ
Happy Teddy Day 🧸

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,