உலகதாய்மொழி தின வாழ்த்துகள்
உலகதாய்மொழி தின வாழ்த்துகள்
உலகத்தின் முதல் மொழியே உணர்வில் கலந்த உயிர்மொழி
என் தாய்மொழியே தமிழே உனக்கு என் தலை வணக்கம்🙏
தமிழே என் தாய்மொழித் தமிழே❤️
உணர்வுகள் இன்பமாய் ஒலிக்கும் மொழியாய்
தாய்மொழி நீயென வையகம் கொழிக்க
எழுச்சிப் பேரலையாய் எழும்பும் எழுத்துகள்
கோர்த்த சொற்களை விதைத்து
ஓடி விளையாடும் சின்னஞ்சிறு மனதிலும்
அமிர்த மொழியின் நறுமணத்தைப் பரப்ப
தமிழே தாய்மொழியென தமிழே முதற்கடவுளென
பிள்ளைப் பார்வையில் மிளிரும் தமிழ்
தாயே..! தமிழே..! பெரும் காவியங்களின் உயிரே!
முக்கனியின் சுவையாகிய முத்தமிழைக் காக்க
சங்கம் வைத்து தமிழை உயிரோவியமாய்
வளர்த்து வாழ்ந்த கவிக் கடவுளோடு
தமிழின் புகழைப் பாடிப் பாடியே
தமிழ்த் தாயின் இளைய மகளாய்
புதுக் கவி்தைகளின் காவியத்தலைவியாய்
தாய் மொழியாம் தமிழ்மொழியை உயிரெனக் காத்திடுவேன்
மனதின்ஓசைகள்
மஞ்சுளாயுகேஷ்.
Comments