எப்பொழுதும் இளமையாக இருக்க
முகம் பொலிவுடன் இருக்கவும், முகத்தில் இருக்கும் கருமைகள் அனைத்தும் மறைந்து போகவும், எப்பொழுதும் இளமையாக இருக்க
ஒவ்வொருவருக்கும் தாங்கள் அழகாக இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் இருக்கும். ஆனால் அவசர காலகட்டத்தில் படிக்கும் பிள்ளைகளாக இருந்தாலும், வேலைகளுக்கு சென்று வருபவர்களாக இருந்தாலும், பலர் அழகை பராமரிப்பதில் சற்று கவனக் குறைவாகத் தான் இருக்கிறார்கள். 20 வயது வரை தங்கள் முகத்தில் எந்த ஒரு பிரச்சனையும் அவர்களுக்கு தெரிவதில்லை. ஆனால் 20 வயதைக் கடந்த பிறகு தான்
ஒவ்வொரு பிரச்சனையாக தோன்ற ஆரம்பிக்கும். ஏனென்றால் முகத்தின் பொலிவு குறைந்து கருமை நிறமாகத் தோற்றமளிக்கும். இதற்கு காரணம் தேவையான அளவு தண்ணீரை நீங்கள்சரியான விகிதத்தில் குடிக்காததால் கூட இருக்கலாம். தினமும் முகத்திற்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும். அதற்கு காலை அல்லது மாலை ஏதேனும் ஒரு வேளை முகத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை கொடுக்க வேண்டும். இதற்கு எளிமையாக கிடைக்கக்கூடிய சில பொருட்களை வைத்து நீங்கள் உங்கள் முகத்தின் பொலிவை பராமரித்துக் கொள்ளலாம்.
டிப்ஸ்: 1 தினமும் காலை எழுந்தவுடன் பால் காய்ச்சி டீ போடுவது வழக்கமாக அனைவரது வீட்டிலும் m வைத்து, முகத்தில் தடவி மசாஜ் செய்வதன் மூலம் முகத்திற்கு நல்லதொரு ஊட்டசத்தாக அமைகிறது. இதனால் முகம் பொலிவுடன் இருக்கும். -
- டிப்ஸ்: 2 அடுத்ததாக பலரது வீட்டிலும் சமையலுக்கு கடலை மாவு பயன்படுத்தி வருகின்றனர். இந்த கடலை மாவை 2 ஸ்பூன் எடுத்துக் கொண்டு, அதனுடன் இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து, ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்துக் கொண்டு நன்றாக கலந்துவிட வேண்டும். பிறகு இந்தக் கலவையை முகத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து அப்படியே விட்டுவிடவேண்டும். சிறிது நேரத்தில் இவை உலர்ந்து முகத்தில் இறுக்கத்தை உண்டாக்கும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும் இப்படி செய்வதன் மூலம் முகத்தில் இருக்கும் முகப்பரு தழும்புகள், மற்றும் கரும்புள்ளிகள் முழுவதுமாக மறைந்து விடும். முகச் சுறுக்கம் இருந்தாலும் சரியாகிவிடும். -t
- டிப்ஸ்: 3 அசைவம் செய்யும் அனைவரது வீட்டிலும் எலுமிச்சை பழம் நிச்சயம் இருக்கும். இந்த எலுமிச்சை பழத்தை உபயோகித்துவிட்டு, அந்தத் தோலை வெயிலில் காய வைத்து, மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். பிறகு இந்த எலுமிச்சை பொடியில் இருந்து இரண்டு ஸ்பூன் எடுத்துக் கொண்டு, அதனுடன் ஒரு விட்டமின் இ கேப்சூல் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு தக்காளி பழத்தின் சாறை சேர்க்கவேண்டும். பிறகு இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து உலர விட்டு, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும், இதனைத் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள், கருவளையங்கள் மறைந்து கரும்புள்ளிகள், முகப்பரு தழும்புகள் அனைத்தும் முழுவதுமாக அகன்றுவிடும். உங்கள் முகம் எப்பொழுதும் 20 வயதில் உள்ளவர்களை போல இளமையாகவே தோற்றமளிக்கும். -
Thanks தெய்வீகம். Com
Comments