செடி கொடிகள் போல உங்களுடைய முடியும் தாறுமாறாக வளர்ந்து கொண்டே செல்ல வேண்டுமா
செடி கொடிகள் போல உங்களுடைய முடியும் தாறுமாறாக வளர்ந்து கொண்டே செல்ல வேண்டுமா? அப்போ இந்த ‘கிரீன் ஹேர் பேக்’ மட்டும் போதுமே.
தலைமுடியை வளர்ப்பதற்கு நிறைய காசு கொடுத்து கெமிக்கல் கலந்த, நிறைய பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை விட்டு விடுங்கள். அது பக்க விளைவுகளை தான் ஏற்படுத்தும். உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் செடி கொடிகளில் இருந்து இந்த பச்சை நிற இலைகளை எல்லாம் பறித்து ஒன்றாக அரைத்து உங்கள் தலையில் ஒரு பேக் போட்டால் போதும். தலைமுடி பசுமையான செடிகள் போல தாறுமாறாக வளர்ந்து கொண்டே செல்லும். இயற்கையான ஒரு கிரீம் ஹேர் பேக்கை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம்.
முதலில் நல்லெண்ணெயில், 4 மிளகை போட்டு வெதுவெதுப்பாக சூடு செய்து அந்த எண்ணெயை உங்களுடைய தலையில் மயிர் கால்களில் படும்படி நன்றாக தடவி 30 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பின்பு இந்த ஹேர் பேக் போட்டால் செம ரிசல்ட் கிடைக்கும்.
ஹேர் பேக் அரைக்க தேவையான பொருட்கள். வேப்பிலை – 1 கைப்பிடி, கறிவேப்பிலை – 1 கைப்பிடி, மருதாணி – 1 கைப்பிடி, செம்பருத்தி இலை – 1 கைப்பிடி, அலோ வெற ஜெல் – 4 டேபிள்ஸ்பூன், தோல் சீவிய இஞ்சி – 1/2 இன்ச், எலுமிச்சை பழம் – பாதி தோளோடு அப்படியே போட்டு அரைத்துக் கொள்ள போகின்றோம்.
எல்லா இலைகளையும் சம அளவாக எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு பெரிய முடியாக இருந்தால் அளவுகளை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். சிறிய முடியாக இருந்தால் அளவுகளை குறைத்து கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான்.
மேலே சொல்லியிருக்கும் எல்லா பொருட்களையும் நன்றாக கழுவி விட்டு தண்ணீரை வடித்து மிக்ஸியில் போட்டுக் கொள்ளுங்கள். தேவையான அளவு புளித்த தயிரை ஊற்றி விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டாம். அவ்வளவுதான் சூப்பரான நம்முடைய கிரீன் ஹேர் பேக் தயார்
இந்த ஹேர் பேக்கை முடியின் வேர் பகுதியில் இருந்து, நுனி பகுதி வரை மொத்தமாக அப்ளை செய்து விடுங்கள். அப்படியே தலையை கொண்டை கட்டிக்கொள்ள வேண்டும். 30 நிமிடத்தில் இருந்து 1 மணி நேரம் வரை இந்த ஹேர் பேக் தலையில் இருக்கலாம். உங்களுடைய தலைமுடியில் இருக்கும் அத்தனை பிரச்சினைக்கும் தீர்வு தரக்கூடிய பொருட்கள் இந்த பேக்கில் கலந்துள்ளது.
எந்த காரணத்தால் முடி உதிர்வு இருந்தாலும் சரி, எந்த காரணத்தால் முடி வளராமல் இருந்தாலும் சரி, அந்த காரணங்களை சரி செய்து உங்களுடைய முடியை அழகாக வளரச் செய்யும். வாரத்தில் 1 ஒருநாள் மட்டும் இந்த ஹேர் பேக்கை ட்ரை பண்ணி பாருங்க. உங்களுக்கே வித்தியாசம் தெரியும். ஹேர் பேக் தலையில் நன்றாக ஊறிய பின்பு தலையை முதலில் நல்ல தண்ணீரை கொண்டு நன்றாக அலசி விட்டு, அதன் பின்பு சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு குளித்து பாருங்கள். முடியில் இருக்கக்கூடிய வித்தியாசம் உங்களுக்கு தெரியும்.
நன்றி
https://dheivegam.com/
Comments