ஆஸ்கர் இறுதிப் பரிந்துரையில் ஒரே இந்திய ஆவணப்படம் ’ரைட்டிங் வித் ஃபையர்’/ ஜெய் பீம்’ வெளியேற்றம்

 ஆஸ்கர் இறுதிப் பரிந்துரையில் ஒரே இந்திய ஆவணப்படம் ’ரைட்டிங் வித் ஃபையர்’ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இந்திய படங்கள் எதுவும் இடம்பெறவில்லை. தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம்’ படமும், மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான‘ ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படமும் ஆஸ்கர் விருதுக்கு தகுதிப் படங்கள் பட்டியலில் இடம்பிடித்திருந்த நிலையில், இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறவில்லை.


.அதேபோல், ஹாலிவுட்டில் ஆஸ்கர் விருதுக்கு அடுத்த நிலையாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுக்கான போட்டியில் ‘ஜெய் பீம்’ இடம்பெற்றது. சமீபத்தில் ஆஸ்கர் அகாடமியின் அதிகாரபூர்வ யூடியூப் பக்கத்தில் ஜெய் பீம் படத்தின் காட்சிகள் பதிவேற்றப்பட்டிருந்தன. மலையாளத்தின் 'மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்துடன் ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் பட்டியலில் ‘ஜெய் பீம்’ திரைப்படம் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது, இறுதிப் போட்டிக்கான நாமினேஷன் பட்டியலில் இந்த இரண்டு படங்களும் தகுதிபெறவில்லை.


சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான தகுதிப் பட்டியலில் 276 திரைப்படங்களில் ‘ஜெய் பீம்’ திரைப்படமும் இணைந்து போட்டியிட்டது. இதிலிருந்து 10 படங்களே இறுதிப் போட்டிக்கான நாமினேஷன் பட்டியலில் இடம்பெற முடியும். அதன்படி, அந்த 10 படங்களின் வரிசையில் 'ஜெய் பீம்' இடம்பெறவில்லை

94 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படும் விழா வரும் மார்ச் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதன் இறுதிப் பரிந்துரைப் பட்டியலுக்குத் தேர்வாகியுள்ள பத்து படங்கள் முறையே, 'Belfast', 'CODA', 'Don’t Look Up', 'Drive My Car', Dune', 'King Richard', 'Licorice Pizza', 'Nightmare Alley', 'The Power of the Dog', 'West Side Story' ஆகும். இதேபோல், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த உறுதுணை நடிகர், சிறந்த காஸ்டியும் டிசைனர், சிறந்த ஆவணப்படம் உள்ளிட்ட 23 பிரிவுகளுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலையும் ஆஸ்கர் அகாடமி அறிவித்துள்ளது.

ஒரே இந்திய தயாரிப்பு : 'Writing With Fire'


இந்த ஆஸ்கர் இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய தயாரிப்பு என்றால், ரைட்டிங் வித் ஃபயர் (Writing With Fire) என்ற ஆவணப்படம் மட்டுமே. இந்தியாவில் தலித் பெண்களால் நடத்தப்படும் ஒரே பத்திரிகையான 'கபர் லஹரியா'வின் வரலாற்றை எடுத்துரைக்கும் முயற்சியே இந்த 'Writing With Fire' ஆவணப்படம். இதனை ரிந்து தாமஸ் மற்றும் சுஷ்மித் கோஷ் என்ற இருவர் இணைந்து இயக்கியுள்ளனர்.


.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,