கற்றல் திருவிழா
கற்றல் திருவிழா
இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் மாலைநேர திறன்வளர் மையங்களில் இதுவரை கற்றுக்கொடுத்த பாடங்களிலிருந்து குழந்தைகளின் திறன் ஆய்வு செய்யும் விழா கற்றலின் விழாவாகும். இந்த கற்றல் திருவிழா காலை 10 மணி முதல் மதியம் 12 30 வரை நடைபெற்றது
இந்த கற்றலின் விழாவை இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் தலைமை செயல்ப்பாட்டாளர் திரு அல்லா பகேஷ் அவர்களின் தலைமையில் AID INDIA நிறுவனத்தின் பயிற்சியாளர் திரு ராஜேஷ் அவர்கள் குழந்தைகளுக்கு இடையே திறனாய்வு செய்தார். இந்த விழாவில் புதிய கண்ணியம்மன் நகர் மாலைநேர திறன்வளர் மையம், புதுநகர் மாலைநேர திறன்வளர் மையம் மற்றும் ஆவடி திறன் வளர் மையம் ஆகிய மையங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் (மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும்) கலந்து கொண்டனர். பயிற்சியாளர் திரு ராஜேஷ் அவர்கள் குழந்தைகளிடம் திறனாய்வு செய்தார் ஆங்கிலம் கணிதம் மற்றும் தமிழ் ஆகிய பாடங்களிலிருந்து குழந்தைகளுக்கு கேள்விகள் கேட்கப்பட்டன. குழந்தைகள் சிறப்பாக தங்களின் பதில்களை பதிவு செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தனர். ஆங்கில வாக்கியங்களை அருமையாக அமைத்தனர், கணிதங்களை கச்சிதமாக செய்தனர், தமிழை தங்குதடையில்லாமல் படித்தனர். மொத்தத்தில் குழந்தைகள் அனைவரும் மிக சிறப்பாக தங்கள் பதிவுகளை செய்தனர்.
இந்த குழந்தைகளுக்கு அருமையாகவும் எளிமையாகவும் இனிமையாகவும் பாடங்களை சொல்லித்தந்த ஆசிரியர்கள் புதுநகர் மேகலா மற்றும் குணசுந்தரி, புதிய கண்ணியம்மன் நகர் ஜீவிதா மற்றும் ரேவதி, ஆவடி மையத்தின் ஆசிரியர் ஹேமாவதி ஆகியோர் மிகவும் சிறப்பாக பாடங்களை நடத்தியுள்ளனர் அதன் வெளிப்பாடு இந்த கற்றலின் திருவிழாவில் அருமையாக அமைந்தது.
மேலும் இந்த கற்றல் திருவிழாவில் தன்னார்வலர்காளாக தனலட்சுமி, ஜீனத் பானு, ஷோபனா, தமிழ்ச்செல்வி, ஹேமலதா, நஸ்ரின் பானு, ராதிகா, சந்தியா ஆகியோர்கள் இந்த திருவிழா அருமையாக நடப்பதற்கு மிகவும் ஒத்துழைப்பு அளித்தனர்.
விழாவில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது அது மட்டுமல்லாமல் சிறந்த மையம் , சிறந்த ஆசிரியர்கள், மற்றும் சிறந்த குழந்தைகள் என தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. முடிவில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் பிஸ்கட், காபி வழங்கப்பட்டது. கற்றல் திருவிழாவில் கலந்துகொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் பயிற்சியாளர் மற்றும் தன்னார்வலர்கள் அவர்களுக்கு இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டது
நன்றி
இனிய உதயம்
Comments