முனைவர் அமுதா பாலகிருஷ்ணன்

 இன்று ஒரு நண்பர் :

கற்றதும் பெற்றதும் : முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் 







அனைத்திந்திய எழுத்தாளர்கள் சங்கத்தின் அவை முன்னவர் என்கிற முறையில் பல முறை கலைமாமணி டாக்டர் விக்கிரமன் ஐயா அவர்கள் வீட்டிலும், பிறகு பல இலக்கிய கூட்டங்களிலும் இவரை சந்தித்திருக்கிறேன்.


பிறகு உரத்த சிந்தனையின் துணைத் தலைவர் என்று ஆன பிறகு எங்கள் நட்பு இன்னும் பலப்பட்டது. 

ஒரு வன்பொருள் வர்த்தகராக (ஹார்ட்வர் கடை), பிறகு அமுதா கல்விக்குழுமங்களின் தலைவராக, அமுதா ஹால் மற்றும் அமுதா ரெசிடெண்சியின் இயக்குனராக, கவிஞராக, ஒரு 40 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி உள்ளவராக, சிறுகதை எழுத்தாளராக, பல இலக்கிய நிகழ்வுகளுக்கு புரவலராக, இலக்கிய வள்ளலாக, ஒரு மிகச் சிறந்த பேச்சாளராக, இவரின் பன்முகத் தன்மையை அறிய முடிந்தது. வாழ்வில் நல்லபடி செட்டில் ஆன பிறகும் என்னுடன் தொலைபேசியில் அழைத்து தனது எம் பி ஏ பட்டம் பற்றி பேசுவார். பிறகு தனது டாக்டர் பட்டம் வாய்மொழி தேர்வுக்கு அழைத்தார். அவரது தொடர்ந்த அந்த கற்றுக் கொள்ளும் தாகத்தை காண நேர்ந்தது. வியந்து போனேன். 


எல்லா இலக்கிய போட்டிகளிலும் இவரே முதல் பரிசு வாங்குவர். பல அமைப்புகளின் கெளரவம், பல அமைப்புகளில் தலைமை, ஏர்வாடி ஐயா அவர்களுடன் பல பிரமுகர்களை சந்தித்தல் என்று இவருடைய பணிகளும் சேவைகளும் பிரமிக்க வைக்கின்றன. 

தொடர்ந்து ஒரு மாணவனைப் போல இளமைத் துடிப்புடன் ஆரோக்கியத்தை, கற்கும் ஆர்வத்தை, எல்லோருடனும் நட்பை, பரஸ்பர மரியாதையை, அதே சமயம் வியாபாரத்தை, இலக்கிய பணியை கவனிக்க இவருக்கு மட்டும் எப்படி 24 மணி நேரம் தாண்டி இருக்கிறது என்று யோசித்து இருக்கிறேன் பல முறை. 


 :


இவரிடம் இருந்து கற்றுக் கொண்ட விஷயங்கள் இதோ: 


உற்சாகம், புன்னகை, எதிலும் ஒரு நேர்த்தி, வேகம், பேச்சுத் திறன், எழுதும் திறன், எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பங்களிப்பு தருதல், உதவும் பாங்கு, வள்ளல் தன்மை, தொடர்ந்து படிப்பது மற்றும் படைப்பது, தலைமை பண்புகளை பிரதிபலிப்பது, குடும்பத்தின் மீது அக்கறை, ஒரு பரிசு கிடைத்தாலும் தனது அன்னையிடம் ஆசி பெறும் பண்பு, எல்லா நல்ல நிகழ்வுகளுக்கும் மனைவியுடன் வருதல் - அதுவும் ஒரே வண்ணத்தில் உடை அணிந்து வருதல், கடின உழைப்பு, தன்னம்பிக்கை, திறமை யாரிடம் இருந்தாலும் மனம் திறந்து பாராட்டுதல், பெரியோர்களிடம் மரியாதை, இளையவர்களோடு அரவணைப்பு என்று அடுக்கிக் கொண்டே போகலாம். 


இவர் பல்லாண்டு நல்ல ஆரோக்கியத்தோடு, தேக பலத்தோடு, சிறந்த சேவையோடு, வலம் வர வேண்டும், பல வெற்றிகளும் விருதுகளும் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.


நன்றி: பாலசாண்டில்யன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,