செருப்பு பிய்ந்துடும்

 வாலண்டைன் நாள் 



அன்றொரு நாள் 

வேலையற்று 

சும்மா இருந்த 

வீதி யோர

செருப்பு தைக்கும்

தொழிலாளியிடம் 

காத்திரு

செருப்பு ஒன்னு வருகிறது 

தைக்க என்றேன் 

தலைவலி என

மருந்து வாங்க 

மருந்து கடை சென்று 

அந்த அழகு நங்கை 

விற்பனை பணிப்பெண்ணிடம் 

தலைவலி மருந்து வாங்க 

வந்தேன் 

உன்னை பார்த்தவுடன் 

தலைவலி போய்டுச்சு 

என்றேன் 

வேறு என்ன வேண்டும்

உனக்கு அவள் கேட்க 

நீ தான் வேண்டும் 

என சொல்ல 

செருப்பு பிய்ந்துடும்

என சொல்ல

அதான் வேணும் 

அங்கே சொல்லிட்டேன் 

செருப்பு தைப்பவனிடம்

செருப்பு ஒன்னு 

வரப்போகுது என்றேன் 

தன்னை மறந்து

சிரித்தாள் 

ஒரு காதல் 

பிறந்தது 

அங்கே 

---உமாதமிழ்



Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி