மேடைத் தென்றல் கவிதா ஜவகர்

 மேடைத் தென்றல்  கவிதா ஜவகர் அவர்களுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதா ஜவகர் 

*


பேச்சாளர் மற்றும் கவிஞர் கவிதா ஜவகர்  அவர்களின் உரைகளை அண்மையில் யூட்யூபில் கேட்டு வருகிறேன். 10 நிமிட உரையாக இருந்தாலும் ஒரு மணி நேர உரையாக இருந்தாலும் ஒவ்வொன்றிலும் முத்திரை பதிக்கிறார்.  இலக்கியப் புலமை, பல்துறைப் படிப்பு, ஆழமான அணுகுமுறை  என அசரடிக்கும் கவிதா ஜவகர் அவர்களைக் கம்பன் கழக மேடைகளில் சிலமுறை கேட்டிருக்கிறேன். இப்போது ஏராளமான   கல்லூரி விழாக்கள், தன்னம்பிக்கைச் சொற்பொழிவுகள், தொலைக்காட்சிகள் என இலக்கிய மேடைதோறும்  காணமுடிகிறது.


 'அப்பா' என்ற தலைப்பில் பத்து நிமிடம் பேசிய அவரது காணொளியை அண்மையில் கேட்டேன். கேட்டுக்கொண்டிருக்கும் போதே கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. லட்சக்கணக்கானவர்கள் அக்காணொளியைக் கண்டிருக்கிறார்கள்.


பட்டிமன்றங்களில் அவர் தலைப்பை அணுகும் விதமும் அடுக்கடுக்காக வைக்கும் வாதங்களும் வெறும் சுவாரஸ்யத்திற்காக மட்டும் இன்றி அர்த்தம் மிக்கவையாகவும்  தர்க்கரீதியாகவும் இருப்பதைக் காணமுடியும். 


நல்ல கவிஞரும் கூட. 'கரிசல்காரி' எனும் புனைப்பெயரில் 'நீயே முளைப்பாய்' எனும் அருமையான கவிதை தொகுதி ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். 


உதாரணத்திற்கு ஓரிரு வரிகள்:


'வீடியோ காலி'ல்

அழைத்துவிட்டு மௌனமாய் என்னையே பார்த்துக்கொண்டிருக்கும் 

      அம்மாவின் கண்களில் 

      ஒளிர்வதுதான் 

      பிரியத்தின் பேரொளி"


     " எனக்குப் பின்னால் 

       நீ தோண்டிய 

       குழியில்தான்

       மரமாய் வளர்ந்தேன் 

        நான்"


மேடைத் தென்றல்  கவிதா ஜவகர் அவர்கள் மேலும் மேலும் புகழ் பெறவும் வாழ்வில் நலம் காணவும் இப்பிறந்த நாளில் அவரை   வாழ்த்துகிறேன். 💐

*

அன்புடன், 

பிருந்தா சாரதி


.

Comments

Popular posts from this blog

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,