ஒரு கனவின் மரணம்

 ஒரு கனவின் மரணம்

*


பச்சை தேடிச் சலித்த பரிசல் ஞானம் இது

பயணம் என்பது

இக்கரையிலிருந்து அக்கரைக்கு

செல்வதல்ல

ஊற்றுக்கண்ணிலிருந்து 

கடலுக்குச் செல்வது. 

    - லலிதானந்த் ( கடைசியாகப் பதிந்த கவிதை)


கவிஞர் லலிதானந்த்தை நான் சந்தித்ததில்லை. இன்று அவரது மரணச் செய்தி கேட்டு கலக்கமாக இருக்கிறது. 


இயக்குனர் பாலாஜி சக்திவேலின் 'நான் நீ நாம்' திரைப்படத்திற்கு முழுப் பாடல்களையும் எழுதியவர் அது வெளிவரும் முன்பே இவ்வுலகை விட்டு விடைபெறுவது கலைஞனின் சாபம் இன்றி வேறென்ன?


கனவுகள் சுமந்து மாநகர் வந்தவன்

உயிரையும் விட்டு வெறும்

உடலாக ஊருக்குச் செல்வதென்ன கொடுமை?


இன்று அவரது முகநூல் Lalithanand Anandan  பக்கத்தில் போய்ப் படித்துப் பார்த்தேன். எத்தனை அற்புதமான கவிதைகள்? எவ்வளவு கனவுகள்?

*

 

விதவிதமாய் அடுக்கிவைத்தும் 

விற்பனையே ஆகாத 

செருப்புகளின் பின்னணியில் 

செல்ஃபி எடுக்கிறான் சிரித்தபடி 

நடைபாதைக் கடைக்காரன் நாளிறுதியில்.  

வெறுங்கையுடன் கிளம்புபவனிடம்  

வெறுங்கால்களுடன் வருகிறார் கடவுள். 


                ~ லலிதானந்த் ~


மயில்போல மாடுபோல 

சிங்கம்போல யானைபோல 

சித்திரங்களை அழித்து அழித்து

காற்று உருவாக்குகிறது 

மேல்வானில் ஒரு மேகக்குதிரையை.

அது வரிக்குதிரையாகும்படி 

இக்கணம் ஒரு வானவில் தோன்றினால் 

போதும் எனக்கு. 

   - லலிதானந்த்


நம்பிக்கையை 

நல்வாழ்விற்கான வெளிச்சத்தை எழுதும்

கலைஞர்களின் விதியை இப்படியா எழுதுவாய் நீ இயற்கையே?


அழகை வரையும் தூரிகையை இப்படி அலங்கோலமாக்கியா எரிப்பாய் காலமே?


ஒரு கனவின் மரணத்தைச்

சுமக்க இயலாமல் பாரத்தோடு நகர்கிறது 

இத்துயர்  இரவு. 

***

 - பிருந்தா சாரதி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,