பாய் வீட்டு பிரியாணி பொடியின் ரகசியம்

 பாய் வீட்டு பிரியாணி மட்டும் தனிப்பட்ட சுவையில் இருக்க அவர்கள் பயன்படுத்தும் பொடியின் ரகசியம்என்னதான் பிரியாணியை கடைகளில் வாங்கி சாப்பிட்டாலும், வீட்டில் பார்த்து பார்த்து சமைத்தாலும், அதன் சுவை எப்பொழுதுமே பாய் வீட்டு பிரியாணியின் சுவைக்கு ஈடாகாது. ஏனென்றால் அவர்கள் செய்யும் பிரியாணிக்கு என்று தனிப்பட்ட சுவை இருக்கும். அதில் அவர்கள் சேர்க்கும் தனி வித மசாலாவின் ரகசியத்தை பலரும் அறிந்திருப்பதில்லை. இவ்வாறு பாய் வீட்டு பிரியாணி சுவையில் வீட்டிலும் பிரியாணி செய்ய பலரும் கடைகளில் விற்கும் பிரியாணி மசாலா வாங்கி உபயோகப்படுத்துகின்றனர். ஆனால் அந்த மசாலாக்கள் அனைத்தும் பலவித வாசனை பொருட்கள் சேர்த்து செய்வதால், பிரியாணியின் சுவை வேறுவிதமாக மாறிவிடுகிறது. இந்த மசாலா சேர்த்து செய்யும் பொழுது கொஞ்சம் சாப்பிட்டாலும் திகட்டும் சுவையை கொடுத்துவிடும். இவ்வாறு தேவையற்ற மசாலாக்களை சேர்த்து பிரியாணி செய்யாமல் பாய் வீட்டு பிரியாணி சுவைக்கு என்ன காரணம் என்னும் ரகசியத்தை தெரிந்து கொண்டு, அவ்வாறு ஒருமுறை உங்கள் வீட்டில் பிரியாணி செய்து பாருங்கள். வாருங்கள் இந்த பதிவில் அந்த பிரியாணியில் சேர்க்கப்படும் ரகசிய பொடி எப்படி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.


தேவையான பொருட்கள்: பட்டை – 100 கிராம், ஏலக்காய் – 50 கிராம், கிராம்பு – 50 கிராம்.


செய்முறை: பிரியாணி மசாலா செய்வதற்கு மிகவும் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் அளவு எப்போதும் சரியான பதத்தில் இருக்க வேண்டும். இதில் சேர்க்கப்படும் பட்டை ஒரு பங்கு என்றால் அதில் அரைப்பங்கு தான் கிராம்பு மற்றும் ஏலக்காயை இருக்க வேண்டும்.


இவற்றில் ஏதேனும் ஒரு பொருளின் அளவு கூடுதலாகவும், குறைவாகவும் இருந்தது என்றால் பிரியாணி பாய் வீட்டு பிரியாணியின் மணத்தில் இருக்காது. இந்த பிரியாணி செய்வதற்கு முதலில் இந்த மசாலா பொருட்கள் மூன்றையும் ஒரு தட்டில் பரவலாக வைத்து வெயிலில் காய வைக்க வேண்டும்

வெயிலில் காய வைக்க முடியாதவர்கள் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு பேனை வைத்து, பேன் நன்றாக சூடானதும் இந்த மசாலாக்களை சேர்த்து சிறிது நேரம் வறுத்து கொள்ள வேண்டும். இதனை வறுக்கும் பொழுது அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை ஆற வைத்து, மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.


பயன்படுத்தும் முறை: அரைத்த பிரியாணி மசாலாவை ஒரு பேப்பரில் கொட்டி, சிறிது நேரம் ஆற வைத்து, அதன் பின்னர் ஒரு டப்பாவில் சேர்த்து மூடி போட்டு வைக்க வேண்டும். ஒரு கிலோ மட்டன் பிரியாணி செய்வதாக இருந்தால் அதனுடன் ஒரு ஸ்பூன் இந்த பிரியாணி மசாலாவைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதுவே சிக்கன் பிரியாணியாக இருந்தால் முக்கால் ஸ்பூன் மசாலா சேர்த்துக்கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் சால்னா, கிரேவி, சுக்கா, கறி குழம்பு போன்றவற்றை சமைக்கும் பொழுதும் இந்த பிரியாணி மசாலாவை கால்ஸ்பூன் அல்லது அரை ஸ்பூன் அளவு சேர்த்துக் கொள்ள, அனைத்து உணவும் மணமணக்கும் சுவையில் அற்புதமாக இருக்கும்.

அட எங்கே ஓடறீங்க. மசாலா பொடி பண்ணவா. 

கொல்லி மலை கிராம்பு அருமையாக இருக்குமாம்

பொபக

courtesy: deiveegam .com


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,