CIBIL என்றால் என்ன?/அடிப்படை சட்ட தகவல் பகுதி

 CIBIL என்றால் என்ன?


-------------------------------------
சிபில் (#CIBIL) , என்று சுருக்கமாக அழைக்கப்படும் இது 'கடன் தகவல் நிறுவனம்' - (Credit Information Bureau of India Limited ) என்பதாகும்.இது கடந்த 2000-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. 


இந்த நிறுவனத்தின் முக்கிய பணி கடன் பெறுபவர்கள், கடன் அட்டை பயன்படுத்துபவர்கள் ஆகியோர் குறித்த முழுத்தகவல்களைத் திரட்டி, அவர்களின் நேர்மையை அளவிட்டு, அதை புள்ளிகளாக வழங்குவதே ஆகும்.வங்கிகள், நிதி நிறுவனங்கள் தங்களிடம் கடன் வாங்குபவர்கள் குறித்த தகவல்களை மாதந்தோரும் இந்த நிறுவனத்திற்கு தெரிவிக்கவேண்டும். 


 வீடு கட்ட, வாகனம் வாங்க, கல்யாணம் முடிக்க என வாழ்க்கையின் அத்துணை தேவைகளையும் கடன் வாங்கியே எல்லோரும் நிறைவேற்றுகிறோம். இப்படிக் கடன் வாங்கிப் பயனடையும் சிலர் வங்கிக் கடனை முறையாகத் திருப்பிச் செலுத்துவது இல்லை. இம்மாதிரியான விஷயங்களை சிபில் அமைப்பு கண்காணிக்கும்.

                                                

வங்கியில் கடன் பெற்றவர்களின் தகவல்களைச் சம்பந்தப்பட்ட வங்கி, நிதி நிறுவனத்திடம் இருந்து பெற்று, #சிபில் அமைப்பு கண்காணித்து வரும்... இதை வைத்து இந்த அமைப்பு கடன் தகவல் அறிக்கையை உருவாக்கும். அதனடிப்படையில் நமக்கும் கடன் புள்ளிகள் வழங்கப்படும்.


இந்தப் புள்ளிகளின் அடிப்படையில்தான் நமக்கு ஒவ்வொருமுறையும் மீண்டும் கடன்கள் வழங்கப்படும். இதன் மூலம் கடனைச் செலுத்த முடியாத பொருளாதாரப் பின்னணியில் இருப்பவர்களை வங்கிகள் கண்டறிந்துகொள்ள முடியும். அவர்கள் மீண்டும் கடனுக்கு விண்ணப்பித்தால் அவர்களுக்குக் கடன் கிட்டாமல் போகும்.                       இந்த "சிபில்"-புள்ளிகள் மூலம்  ஆபத்து குறைந்த கடன்களை வழங்க முடியும்  என்று வங்கிகள் கருதுகின்றன.அதாவது வாங்கிய கடனை திரும்பக் கட்டும் பழக்கம் உடைய நல்ல வாடிக்கையாளர்களைப் பெறுவதே இந்த  அமைப்பின் நோக்கம்.    

                                                                          அனைத்து வாடிக்கையாளர்களின் பெயர், பிறந்த தேதி, அடையாளத்திற்காக வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட்,ஓட்டுனர் உரிமம், ரேஷன் கார்ட்,பான் கார்டு போன்றவற்றின் எண்களும் இந்த தகவல் கிடங்கில் சேமிக்கப்படுகின்றன. எனவே வாங்கிய கடனைத் திரும்ப செலுத்தாத வாடிக்கையாளர்கள் இந்த பட்டியலில் சிக்குவது உறுதி. இவ்வாறு சிக்கும் ஒரு வாடிக்கையாளர் பிறகு வேறெந்த வங்கியிலோ, நிதி நிறுவனத்திலோ கடன் பெற முடியாது.


இது உலகத்தின் பல பகுதிகளிலும் பின்பற்றப்படும் ஒரு நடைமுறைதான். அமெரிக்கா போன்ற முன்னேறிய(தாகக் கூறப்படும்) நாடுகளில், கடன் வரலாறு சிறப்பாக உள்ள வாடிக்கையாளர்களுக்கு மிகக்குறைந்த வட்டியில் கடன் அளிக்கப்படுகிறது.  

                                                                                                               நாம் தவணை முறையில் பற்பல விலையுயர்ந்த உபயோக சாதனங்கள் வாங்கும்போதும், வங்கிகளில் லோன் (#loan) பெறும் போதும், "CIBIL SCORE" - என்று சொல்லி, வாடிக்கையாளரின் முந்தைய #கடன் செலுத்துதல்களை கட்டாயம் சரிபார்ப்பார்கள்.                      


 சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால்?


கடன் வாங்க விண்ணப்பிக்கும்போது   கடன் புள்ளிகள் குறைவாக இருந்தால்?


ஏற்கனவே கடன் வாங்கி முறையாகக் கட்டத் தவறியிருக்கும் பட்சத்தில், மீண்டும் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது- நமக்குக் கடன் கிட்டாமல் போக வாய்ப்புள்ளது. இந்த மாதிரியான நேரங்களில் நீங்கள் உங்களுடன் விண்ணப்பதாரராக, உங்கள் கணவனையோ- மனைவியையோ சேர்த்துக்கொள்ளலாம்.துணை விண்ணப்பதாரரின் கடன் புள்ளிகளையும் சேர்த்தே வங்கிகள் கணக்கிடும் என்பதால் கடன் கிடைப்பது எளிதாகும்.இது ஒரு வழி முறை.இந்த 'சிபில் ஸ்கோர்' முறை வீட்டுக் கடனுக்கு மட்டுமல்ல, தனிநபர்க் கடன்களுக்கும் இது பொருந்தும். குறைந்த செலவுடைய வீட்டு உபயோகப் பொருள்கள் போன்ற சிறியவகை கடன்களுக்கு இது பொருந்தாது.

                                                                        நீங்கள் வங்கியில் கடனை முழுமையாகச் செலுத்தி முடிந்ததும், ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு மேற்கண்ட சிபில் நிறுவனத்தில் இணைய விண்ணப்பிக்க வேண்டும். இப்படி விண்ணப்பிக்கும்போதுதான் நமக்கான கடன் புள்ளிகள் குறித்து நமக்குத் தெரிய வரும்.இந்தக் கடன் புள்ளிகளைப் பெற சிபில் அமைப்பு, கட்டணமும் வசூலிக்கிறது. (#banking)
Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,