இளையராஜாவின் இசை மழையில் நனைய தயாராகுங்கள்... லைவில்..
சென்னை : கொரோனா காரணமாக நடத்தப்படாமல் இருந்த இசைஞானி இளையராஜாவின் லைவ் இசைக்கச்சேரி சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த இசை கச்சேரிக்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.
இளையராஜா கச்சேரி இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் 20,000 க்கும் அதிகமான மேடைக் கச்சேரிகளை இளையராஜா நடத்தி உள்ளார். பல லைவ் கச்சேரிகளை நடத்தி ரசிகர்களை இசை மழையில் நனைய வைத்துள்ளார் இளையராஜா. கடைசியாக 2019 ஆம் ஆண்டு இளையராஜாவின் 76 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் இசை கொண்டாடும் இசை என்ற தலைப்பில் லைவ் கச்சேரி ஒன்றை நடத்தினார்.
எஸ்பிபி - இளையராஜா இணைவு வழக்கமாக இளையராஜாவின் கச்சேரிகளில் 40 முதல் 50 இசைக் கலைஞர்கள் தான் பங்கேற்பார்கள். ஆனால் முதல் முறையாக இந்த கச்சேரியில் 100 இசைக் கலைஞர்கள் பங்கேற்றனர். 2017 ல் நடந்த பிரச்சனைக்கு பிறகு எஸ்பிபி மற்றும் இளையராஜா இணைந்து நடத்திய இந்த இசைக்கச்சேரி கிட்டதட்ட நான்கு மணி நேரம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 2019 ல் கோவையிலும் முதல் முறையாக லைவ் கச்சேரியை நடத்தினார் இளையராஜா
l
l
மார்ச்சில் மீண்டும் கச்சேரி அதன் பிறகு கொரோனா காரணமாக மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் நடத்த திட்டமிட்டிருந்த இசைக் கச்சேரிகளை இளையராஜா ஒத்திவைத்தார். இந்நிலையில் கிட்டதட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் சென்னையில் இளையராஜாவின் இசைக்கச்சேரி நடத்தப்பட உள்ளது. வரும் மார்ச் மாதம் இந்த லைவ் கச்சேரியை நடத்த இளையராஜா திட்டமிட்டுள்ளார்.
Rock with Raaja Rock with Raaja என்ற தலைப்பில் இந்த லைவ் கச்சேரி மார்ச் மாதம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த தகவலை இளையராஜா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதே சமயம் கச்சேரி எந்த தேதியில் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்படவில்லை. இருந்தாலும் இந்த கச்சேரி எப்போது நடைபெற என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
Advertisements
No comments:
Post a Comment