பத்திரப் #பதிவு குறித்த கேள்வி பதில்கள்:-

 பத்திரப் #பதிவு குறித்த கேள்வி பதில்கள்:-

::::::::::::::#::::::::::::::#::::::::::::::::#::::::::::::



1. சொத்தின் மதிப்பில் எத்தனை சதவிகிதம், #பத்திரம் பதிய செலவாகும்? 


 நீங்கள் என்ன வகை ஆவணம் என்பதை இங்கே குறிப்பிடவில்லை.ஆகையால் விற்பனை ஆவணம் (Sale #Deed) என்று எடுத்துக்கொண்டால்,அந்தச் சொத்தின் சந்தை மதிப்பில் (அரசுவழிகாட்டி மதிப்பு) 7 சதவிகிதம் முத்திரை கட்டணமாகவும், 4 சதவிகிதம் பதிவுக்கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.  


2. சொத்தின் மதிப்பு எவ்வளவுக்கு அதிகமாக இருந்தால், அந்தச் சொத்தை பதிவு செய்ய வேண்டும்? 


ரூ. 100 க்கு அதிகமான மதிப்பு கொண்ட அசையாத சொத்துகள் அனைத்தும் பதிவு செய்யப்படவேண்டும்.  


3. குறிப்பிட்ட மதிப்புக்கு கீழ் இருந்தால்,மனையை பதிவு செய்ய கட்டணம் கிடையாது. அந்தத் தொகை எவ்வளவு என்று குறிப்பிட முடியுமா? 


ஆம், அந்தக் குறிப்பிட்ட தொகைரூ. 25,000. 


4. நான் வாங்கப் போகிற மனையின் அரசுமதிப்பு சதுர அடி ரூ. 1,000. சந்தை விலைரூ. 500. எந்த மதிப்புக்கு நான் பத்திரம்பதிவு செய்ய வேண்டும்?


நீங்கள் அரசு வழிகாட்டி மதிப்புக்குத்தான் ஆவணத்தைப் பதிவு செய்ய வேண்டும். ஆனால் நீங்கள்குறைந்த மதிப்பிற்குப் பதிவு செய்திருந்தால் சார் பதிவாளர் அந்த ஆவணத்தை, சிறப்பு துணை மாவட்ட ஆட்சியர் (#முத்திரைத்தாள்)அலுவலகத்திற்கு அந்தச் சொத்தின் சந்தை மதிப்பை அறிய அனுப்பி வைப்பார். அவர் கண்டறிந்த மதிப்பும் நீங்கள் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளமதிப்பும் ஒன்றாக இருந்தால், உங்கள் ஆவணம் உங்களிடம் ஒப்படைக்கப்படும்.


ஒருவேளை அந்த மதிப்பு நீங்கள்குறிப்பிட்டுள்ள மதிப்பை விட அதிகமாகஇருந்தால், கூடுதல் மதிப்புக்கு முத்திரை,பதிவு கட்டணம் நீங்கள் தனியே செலுத்த வேண்டியிருக்கும். மேலும், சிலநேரங்களில் அப்போதைய சந்தைநிலவரத்தை வைத்து சந்தை மதிப்பைசிறப்பு துணை மாவட்ட ஆட்சியர் அரசுவழிகாட்டி மதிப்பை விட அதிகமாகக்கணக்கிட வாய்ப்பும் உள்ளது. 


5. கடந்த 5 வருடங்களுக்கு முன் வீட்டுமனை ஒன்று வாங்கினேன். அதனைஇப்போது விற்க முயற்சிக்கும் போது சர்வே எண் தவறாக எழுதப்பட்டுள்ளது.இதற்கு திருத்தல் பத்திரம் போடவேண்டும் என்கிறார்கள். 2010-ல் சதுரஅடி அரசு மதிப்பு 1000 ரூபாய். இப்போது ரூ.2,000. வித்தியாசப்படும் தொகைக்கு முத்திரைத் தீர்வை பதிவு கட்டணம் அலுவலகத்தில் கட்டச் சொல்கிறார்கள்.இந்தத் தொகையை எனக்கு தவறாக பதிவுசெய்து கொடுத்த எனக்கு இடத்தை விற்றவரிடம் கேட்க முடியுமா?


பதிவு செய்யப்பட்ட ஆவணத்தில் எந்தத் திருத்தம் செய்யப்படுவதாக இருந்தாலும் பிழை திருத்தல் #ஆவணம் மூலம் தான் செய்யப்படும். எல்லா பிழைதிருத்தல் ஆவணத்திற்கும் (#Rectification_Deed) , அதிலுள்ள கவனக்குறைவால் ஏற்பட்ட பிழைகளுக்காக கூடுதல் முத்திரை வரியோ கட்டணமோ வசூலிக்கப்படமாட்டாது. 


ஆனால் தாய் பத்திரத்தில் சர்வே எண் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தாலும் கூட நான்கு எல்லைகள், பரப்பளவு, அமைவிடம் ஆகிய மற்ற குறிப்பிட்ட விஷயங்கள் தாய்பத்திரத்தில் உள்ளபடியே இருந்தால்,பிழை திருத்துவதற்கு ரூ. 200 முதல் 300வரை செலவாகலாம். ஒருவேளை ஆவண மதிப்பில் உள்ள புதிய விகிதப்படிசார் பதிவாளர், கூடுதல் முத்திரைகட்டணத்தை கட்ட சொன்னால், நீங்கள்உயர் அதிகாரிகளிடம் மேல்முறையீடு செய்யலாம். உங்களுக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 


6. புதிதாக ஃபிளாட் பதிவு செய்யும் போது,பத்திரப் பதிவுக்கு என்னென்ன கட்டணங்கள் செலுத்த வேண்டி இருக்கும்?


புதிய ஃபிளாட்டுக்கு, முதலில் நீங்கள் கட்டுமான உடன்படிக்கைப் பத்திரத்தைப் பதிவு செய்ய வேண்டும். அதற்கு கட்டட மதிப்பில் 1 சதவிகிதம் முத்திரை கட்டணமாகவும், 1 சதவிகிதம் பதிவு கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.பின்னர், பிரிபடாத மனை விற்பனை ஆவணத்தைப் பதிவு செய்ய வேண்டும்.இதற்கு பிரிபடாத மனை (யூடிஎஸ்)வழிகாட்டி மதிப்பில் 7 சதவிகிதத்தை முத்திரை கட்டணமாகவும் 1 சதவிகிதத்தைப் பதிவு கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.  


7. நான்கு வருட பழைய அடுக்குமாடிகுடியிருப்பை வாங்குகிறேன். வீட்டின்பரப்பு 1000 சதுர அடி. யூடிஎஸ் 600 சதுரஅடி. வீட்டை 35 லட்ச ரூபாய்க்கு வாங்குகிறேன். எனக்கு பத்திரப் பதிவுக்கு எவ்வளவு செலவாகும்?

 

நீங்கள் வாங்கும் கட்டடம் எவ்வளவு பழையதாக இருந்தாலும், பொதுப்பணிதுறையினர் வழங்கியுள்ள மதிப்பின் அடிப்படையில் உங்கள் கட்டடம்மதிப்பிடப்படும். இந்த மதிப்பு ஒவ்வொரு வருடமும் இவ்வாறு கணக்கிடப்படும்.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி