இந்திய அரசமைப்புச் சட்டம், இந்திய காவல் சட்டம் 1861, மாநில மற்றும் மாவட்ட காவல் சட்டங்கள், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973, இந்திய சாட்சிய சட்டம் 1862, சிறப்பு சட்டங்கள்
#காவல்துறை அதிகாரிகள் தங்களுக்கான அதிகாரத்தை, இந்திய அரசமைப்புச் சட்டம், இந்திய காவல் சட்டம் 1861, மாநில மற்றும் மாவட்ட காவல் சட்டங்கள், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973, இந்திய சாட்சிய சட்டம் 1862, சிறப்பு சட்டங்கள் மற்றும் காவல் நிலை ஆணைகள் ஆகியவற்றிலிருந்து பெறுகின்றனர்.
இந்திய அரசமைப்புச் சட்டம் காவல்துறை பற்றி குறிப்பாக எதையும் கூறவில்லை என்றாலும், அது இந்தியாவின் காவல்துறை மற்றும் சட்ட ஒழுங்கு நிர்வாகம் சம்மந்தப்பட்ட மாநிலங்களின் வசம் என அரசமைப்புச் சட்டம் பொருட்பட்டியல் எண். 7 (அத்தியாயம் 246) - பட்டியல் - 2 மாநில பட்டியல் - வ. எண். 2 ல் குறிப்பிட்டுள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973, காவல் அலுவலர் என்றால் யாரென கூறாவிட்டாலும், அவரது அதிகாரங்கள் மற்றும் பணிகள் ஆகியவை பற்றி கூறுகிறது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 2(c) மற்றும் பிரிவு 154 ஆகியவை, காவல் நிலைய பொறுப்பில் இருக்கும் அலுவலருக்கு (Officer in charge of the Police Station) உள்ளூர் அதிகார எல்லையையும் மீறி, #FIR பதிவு செய்யும் அதிகாரத்தை வழங்குகிறது.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 2(c) பிடியாணை வேண்டா குற்றங்களில், காவல் அலுவலர்களுக்கு குற்றஞ்சாட்டப்பட்டவரை பிடியாணை இன்றி கைது செய்யும் அதிகாரத்தை வழங்குகிறது.
பிரிவு 2(o), காவல் நிலைய பொறுப்பு அதிகாரி பற்றி தெரிவித்து, அவர் காவலர் என்ற பதவிக்கு மேற்பட்ட எந்த அலுவலராகவும் இருக்கலாம் என்று கூறுகிறது.
பிரிவுகள் 154 - 176, காவல்துறைக்கு புலன்விசாரணையில் உள்ள அதிகாரம், சாட்சிய ஆதாரங்களை கைப்பற்ற மற்றும் சாட்சிகளை விசாரித்து நீதிமன்றம் முன்பு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய அதிகாரத்தை வழங்குகிறது.
பிரிவுகள் 41 - 60 - A, குற்றஞ்சாட்டப்பட்டவரை கைது செய்யும் அதிகாரத்தை வழங்குகிறது.
பிரிவுகள் 177 - 189, காவல்துறையினர் புலன்விசாரணை செய்ய அவர்களுக்குள்ள அதிகார எல்லைவரம்பு மற்றும் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டிய விவரத்தை வழங்குகிறது. அந்தந்த சரக எல்லையில் இருக்கக்கூடிய நீதிமன்றங்கள், தங்கள் சரகத்திற்குட்ப்பட்ட குற்றங்களை விசாரிப்பதற்கு உகந்தது என எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்க, அதிகார எல்லைவரம்பை அளிக்கிறது.
பிரிவு 36 சார்நிலை #காவல் அலுவலர்களுக்கு உரிய அனைத்து அதிகாரங்களையும், காவல்துறை உயர் அதிகாரிகள் பயன்படுத்தி கொள்ளும் அதிகாரத்தை வழங்குகிறது.
இந்திய சாட்சிய சட்டத்தின் பிரிவு 8, குற்றத்திற்கான காரணத்தை (#motive) அறிந்து கொள்ள காவல் அலுவலர்களுக்கு அதிகாரத்தை வழங்குகிறது.
சாட்சிய சட்டத்தின் பிரிவு 9 புகைப்படம், வீடியோ பதிவு எடுக்க, விரல்ரேகை பதிவு, கால்தட பதிவை சேகரித்து, அடையாள அணிவகுப்பு நடத்த அதிகாரம் வழங்குகிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 54 - A, காவல் அலுவலர்களுக்கு சோதனை அடையாள அணிவகுப்பு நடத்த அதிகாரம் வழங்குகிறது.
சாட்சிய சட்டம் பிரிவு 24 - 30 எதிரியின் ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்யும் அதிகாரத்தை வழங்குகிறது.
சாட்சிய சட்டம் பிரிவு 32(1) மரணமுறும் தருவாயில் இருக்கும் நபரிடமிருந்து, மரண வாக்குமூலம் பதிவு செய்யும் அதிகாரத்தை வழங்குகிறது.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 37 - 40 பொதுமக்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்து உதவியாக இருப்பதற்கான அதிகாரத்தை வழங்குகிறது.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 106 - 124, ஓர் இடத்தின் அமைதியை நிலைநாட்டுவதற்கும், பாதுகாப்பை உறுதி செய்யவும் மற்றும் நன்னடத்தையை பேணவும் அதிகாரத்தை வழங்குகிறது.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 129 - 148, பொது அமைதி மற்றும் பொது ஒழுங்கை பராமரிக்க வேண்டிய அதிகாரத்தை வழங்குகிறது.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 149 - 153, காவல்துறையினர் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் பற்றி கூறுகிறது.
#CrPC #Police
Comments