வான் சிறப்பு/உலகத் தண்ணீர் நாள்/ பிருந்தா சாரதி

 வான் சிறப்பு

*

பிருந்தா சாரதி

*

1

மழை எழுதுவதை

மனிதனால் 

எழுதமுடியாது.


2

மழை வரும்வரைதான்

உன் உறக்கம்

மண்ணே உறங்கு.


3

உறங்கும் விதை

முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பும் மழை.


4

பச்சை நிறக் கையெழுத்திடுகிறது

நிறமில்லா மையால் எழுதும் மழை.


5

நிறமற்ற நீர்  

மழை ஓவியத்தில் எத்தனை வண்ணங்கள் ?


6

மழைத் துளியில்

கருவானதுதான்

இந்த மாநிலம்.


7

பெண்மைதான் நீர்மையும்

எத்தனைப் பருவங்கள் ?

எத்தனை வடிவங்கள் ?


8

நீரில் எழுதிய எழுத்து நிலைக்காதா 

அழித்து அழித்து எழுதும் மழை.


9

வானம் பொய்த்துவிட்டதாம்

பொய் சொல்கிறார்கள்

மரம் வெட்டிகள்.


10

ஏதேதோ உலக இலக்கியமாம்

நீர் எழுதிய இலக்கியம்தான்

உலகமே.

*

('பச்சையம் என்பது பச்சை ரத்தம்' நூலில் இருந்து)


உலகத் தண்ணீர் நாள்


பிருந்தா சாரதி





Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி