*தந்தை பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனைகள்:-*/மகளிர் தினம் 2022 பகிர்வு

 *தந்தை பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனைகள்:-*1. பெண்மையை அடிமைப்படுத்தும் ஆண்மை அநாகரீகமானது.


2. கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் பெண் சமூகம் முன்னேற்றம் அடையும்.


3. ஒரு குடும்பத்தில், நான்கு ஆண்களும், ஒரு பெண்ணும் இருந்தால் முதலில் அந்த பெண்ணை படிக்கவையுங்கள்.


4. ஆணை தொழுதெழ வேண்டும் என்று, பெண்ணுக்கு நிபந்தனை இருந்தால், பெண்ணைத் தொழுதெழ வேண்டும் என்று ஆணுக்கு நிபந்தனை இருக்க வேண்டும்.  (அப்படி ஏன் இல்லை) அதுதான் ஆண்-பெண் சமஉரிமை என்பது.


5. கற்பு என்ற சொல் இருந்தால், அது ஆண்களுக்கும் இருக்க வேண்டும்.


6. நாம் வேண்டும் பெண் உரிமை என்பது என்னவெனில்  ஆணைப்போலவே பெண்ணுகளுக்கும் வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் உண்டென்பதை ஆண் மக்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதே ஆகும்.


7. கணவனை இழந்தால் அவள் விதவை, குழந்தை இல்லை என்றால் அவள் மலடி, ஒழுக்கம் தவறினால் அவள் தரங்கெட்டவள், ஆனால் இந்தப் பட்டமெல்லாம் ஆணுக்கும் உண்டா ? (இருக்க வேண்டும் அல்லவா)


8. ஒரு பெண் பல ஆண்களுடன் கூடினால் அவள் (தேவடியாள்) விபச்சாரி என்று பல பெயர்கள், ஆனால் அதே ஒரு ஆண் பல பெண்களுடன் கூடினால் அவனுக்கு என்ன பெயர் ? சிந்திப்பீர்.

பகிர்வு

அர்ஜுன் 

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்