வறுக்காமல் 2 நிமிடத்தில் இட்லி பொடி ரெடி.

 வறுக்காமல் 2 நிமிடத்தில் இட்லி பொடி ரெடி.



வித்தியாசமான சில பொருட்களை சேர்த்து வறுக்காமல் ஒரு இட்லி பொடி ரெசிபி உங்களுக்காக. இதில் ஒரே ஒரு பொருளை மட்டும் 10 செகண்ட் வறுக்க போகின்றோம். ஆனால் அவ்வளவாக பெரிய வேலை இருக்காது. சட்டுனு வீட்டில் இட்லி பொடி இல்லாத சமயத்தில் யோசிக்காதீங்க. மிக்ஸி ஜாரை எடுங்க இந்த பொடியை 2 நிமிடத்தில் அரைத்து நல்லெண்ணை ஊற்றி இட்லிக்கு தொட்டு சாப்பிட்டால், தோசைக்கு தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும். சரி, டக்குனு ரெசிபியை பார்க்கலாம் வாங்க.


முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து விட்டு அந்த கடாயை நன்றாக சூடு செய்யுங்கள். அந்த கடாய் சூடு ஆவதற்குள் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் பொட்டுக்கடலை – 2 கைப்பிடி, உப்பு – தேவையான அளவு, மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன், பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன், காய்ந்த கறிவேப்பிலை – 2 கொத்து, இந்த பொருட்களை எல்லாம் போட்டு மிக்ஸி ஜாரை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.


இதற்குள் அடுப்பில் கடாய் நன்றாக சூடாகி இருக்கும் அல்லவா. சுடசுட இருக்கும் கடாயில் – 2 டேபிள்ஸ்பூன் எள்ளு போட்டு படபடவென பொரிய விடுங்கள். அந்த எள் சிடசிட சத்தத்தோடு பொரியட்டும். அடுப்பை அணைத்துவிட்டு இதை உடனடியாக மிக்ஸி ஜாரில் கொட்டி விடுங்கள். மிக்ஸி ஜாரை ஓடவிடுங்கள். தேவைப்பட்டால் கொஞ்சம் நறநறப்பாக இதை அரைத்துக் கொள்ளலாம். இல்லை என்றால் நைசாகவேம் அரைத்துக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம்.

மிக்ஸி ஜாரை திறந்து பாருங்க. மணக்க மணக்க வாசனையோட சூப்பரான ஒரு பொடி தயாராக இருக்கும். இதை அப்படியே இட்லிக்கு பக்கத்துல வைத்து நல்லெண்ணெய் ஊற்றி குழைத்து தொட்டு சாப்பிட்டு பாருங்கள். இதன் ருசி அத்தனை அருமையாக இருக்கும்.

courtesy

https://dheivegam.com/2-mits-instant-idli-podi/

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,