"முதிர்ச்சி/கவிதை/மகளிர் தினம் 2022

 "முதிர்ச்சி"



முட்டி முட்டி 

பிதுங்கியழுது இதுதானா 


இவ்வளவு தானா என பலதும் கடந்து


பிஞ்சிலேயே விதைக்கப்படுகிறது 

என்ன செய்வாள் 


பெண் சமூகத்தின் அவநம்பிக்கையை   

துடைத்தெறிய 


சற்றே பெரியதாய் துடைப்பம் தேவை 


ஆணுக்கு பெண் இங்கே சரிநிகர் சமானம் 


என்பது எல்லாம் கணநேர 

கைதட்டலாச்சு 


பேசி அடிமேல் அடி அடித்து 


ஆமை போல் 

அம்மிநகர்த்தி


ஒரு முதிர்ந்த சமூகம் படைக்க 

அழுத்தம் 


அதிகம் தேவைப்படுகிறது 

கரித்துண்டு வைரமாக்கும் 


அழுத்தம் வேண்டுமாய் உள்ளது.


கவிதாயினி

#மனதின்ஓசைகள் 

#மஞ்சுளாயுகேஷ்


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி