பெண்ணே.. அது உன்னால் மட்டுமே முடியும்/.கவிதை மகளிர்/ தினம்2022,
என்னோடு உரையாடவோ
என்னோடு உறவாடவோ
நீ தேவையில்லை
என்னை யாரென்று
எனக்கு நீ காட்டு போதும்.
என்னோடு நடிக்கவோ
என்னோடு போட்டி போடவோ
நீ தேவையில்லை
என்னை நீ இயக்கு போதும்.
என்னோடு வாழவோ
என்னோடு சாகவோ
நீ தேவையில்லை
என்னை ரசிக்க வை போதும்.
என்னை மகன் என்றோ
காதலன் என்றோ
கணவன் என்றோ
தந்தை என்றோ
தோழன் என்றோ
ஏன்..
ஆண் என்றோ கூட
சொல்ல வேண்டாம்
இவனும் மனிதன் என்று
இந்த உலகத்தை மட்டும்
சொல்ல வை போதும்
பெண்ணே..
அது உன்னால் மட்டுமே
முடியும்.
என் பிரியமானவர்களுக்கு இனிய மகளிர்தின வாழ்த்துக்கள்.
💗💗💗💗💗💗💗💗
நயினார்
Comments