கருப்புச் சாயம் பூசிவிடாதீர்கள் படபடக்கும் பட்டாம்பூச்சி நாங்கள்.../கவிதைகள்/மகளிர் தினம்2022,
- Get link
- Other Apps
மாதர் அனைவருக்கும்
மகளிர் தினத்தில் வாழ்த்துகள்
மாதர் தம்மை அடிமை செய்யும்
மடமையை கொளுத்துவோம் என்றார்
மகாகவி
மகளிர் சிலர் இதனை
மருந்தாக
இல்லாமல் விருந்தாக பயன்படுத்துகின்றனர் விடுவேனா
அவனை என்றே
விடா கொண்டனாக
வீட்டு சண்டையை
வீணே பெரிதாக்கி
வீதிக்கு கொண்டு வந்து குடும்ப
வாழ்க்கையையும்
நிம்மதியையும் தொலைக்கின்றனர் ஆணுக்கு பெண்
அடிமையில்லை அழுந்த சொல்வோம் நாம்
ஆணும் பெண்ணுக்கு அடிமையும் இல்லை
என அறிந்தே நடப்போம் ன
சிவனின்றி சக்தி இல்லை
சக்தியின்றி
சிவனில்லை என்ற
சான்றோர் வாக்கினை
சடுதியில் மறக்கின்றோரை
சிந்திக்க வேண்டுகிறேன்
ஆண்டவன் படைப்பில்
அனைவரும் சமமே
சம நிலை போயின் சகலமும்
பாழே என்பதனைச் சற்றே சிந்திப்போம்
நம் சமூகத்தை என்றும் காப்போம்
-கவிதாயினி
- மஞ்சுளா யுகேஷ்.
Enter
Manjula
கண்ணைக் கட்டிய கருப்புத்துணியை
கொஞ்சம் விலக்கி விட்டுப் பாருங்கள்
வானவில்லின் வண்ணங்கள்
நாங்கள் ...
கருப்புச் சாயம் பூசிவிடாதீர்கள் படபடக்கும் பட்டாம்பூச்சி நாங்கள்...
சிறகுகளை வெட்டிடாதீர்கள்...
பளபளக்கும் பட்டாடை மட்டுமே தரும் கூட்டுப் புழுக்களல்ல
நாங்கள் சற்றும் ஓய்வே இல்லாமல்
உழைக்கும் ராணித் தேனீக்கள் பெண்கள்...
கரு தாங்கும் கற்பகத் தருக்கள்
உயிர் வாயிலில், உள்ளம் துடிக்க
உலகிற்கு இன்னோர் உயிரைக் கொண்டு வரும் பெண் பிரம்மாக்கள் ...
அதற்கென கருவறையிலடைத்து
கைகூப்பத் தேவையில்லை...
பல்லக்கிலேற்றி திரை போடவும் வேண்டாம்...
நடக்கிற பாதையில்
பள்ளம் தோண்டாதிருங்கள்...
எங்களுக்கு வேண்டுவதெல்லாம் பார்வைகள் உறுத்தாத
சுதந்திர வானமே உற்சாகமாய் பறந்து திரிய உடையக் கூடிய
சிறகுகளை விடவும் தடைபோடும் வேலிகளைத்
தாண்ட உதவும் கரங்கள் மட்டுமே...
கவிதாயினி
மஞ்சுளாயுகேஷ்.
Enter
- Get link
- Other Apps
Comments