எனக்கு 24 உனக்கு 77.. 53 வயசு வித்தியாசம்.. இப்படியும் ஒரு தம்பதி!

 

எனக்கு 24 உனக்கு 77.. 53 வயசு வித்தியாசம்.. இப்படியும் ஒரு தம்பதி!


வாஷிங்டன்: அமெரிக்காவில் 53 ஆண்டுகள் வயது வித்தியாசம் கொண்ட தம்பதி தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக வாழ்வதாக கூறுகிறார்கள்.

வயது என்பது வெறும் நம்பர் என பெரும்பாலானோர் சொல்வதுண்டு. சாதிக்கவும் படிக்கவும் முன்னேறவும் வயதோ ஆண், பெண் பாலின வித்தியாசமோ தேவையில்லை

அது போல் திருமணத்திற்கும் வயது வித்தியாசம் எல்லாம் பார்க்கத் தேவையில்லை என்பதை நம் தாத்தா, பாட்டி, அம்மா அப்பா உள்ளிட்டோர் நிரூபித்தனர். அவர்களுக்கான வயது வித்தியாசம் குறைந்தது 10 வயதுகளாவது இருக்கும்.

வயது வித்தியாசம்

வயது வித்தியாசம் அதிகமாக இருந்தால் இரு வேறு வயது பிரிவுகளால் வீட்டில் கருத்து வேறுபாடு நிலவும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது. ஒவ்வொரு வயது பிரிவினருக்கும் சிந்தனை திறன் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். இது வாழ்க்கைக்கு ஒத்து வருமா என்ற யோசனையில்தான் 90ஸ் கிட்ஸ் திருமணத்திற்கு வயது வரம்பை நிர்ணயிக்கிறார்கள்.

வயது கண்டிஷன்

தங்களை விட 3 முதல் 5 வயதுக்குள்பட்டவர்கள் அல்லது மேற்பட்டவர்களையே திருமணம் செய்ய முதல் கண்டிஷனாக வைக்கிறார்கள். ஆனால் வயது எல்லாம் ஒரு விஷயமே இல்லை. அன்பு, பக்குவம், புரிதல் இருந்தால் எத்தனை வயது வித்தியாசம் இருந்தாலும் சண்டை சச்சரவின்றி வாழலாம் என்பதற்கு அமெரிக்காவில் ஒரு தம்பதி உதாரணமாக உள்ளனர்.


அமெரிக்கா

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தை சேர்ந்தவர் 24 வயதான கேரி. 77 வயதான மூதாட்டி அல்மெடா. இவர்கள் இருவரும் காதலித்து 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அல்மெடாவின் மகனின் இறுதிச் சடங்கின் போது கேரிக்கும் அல்மெடாவுக்கும் காதல் மலர்ந்தது. பின்னர் இரு வாரங்களிலேயே இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

அல்மெடாவிற்கு 71 வயது

திருமணம் நடைபெறும் போது அல்மெடாவிற்கு 71 வயதாக இருந்தது. கேரிக்கு 17 வயது இருந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்ட போது உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் மிகவும் கேவலமாக பேசிய போதிலும் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். காதலர் தினத்தை முன்னிட்டு உலகிலேயே சிறந்த மனைவி என அல்மெடாவை புகழ்ந்து கேரி இன்ஸ்டா பதிவு போட்டியிருந்தார்.

கெமிஸ்ட்ரி

வாழ்வில் ஒவ்வொரு நொடியையும் ரசிப்பதாகவும் இருவருக்குமான கெமிஸ்ட்ரி சிறப்பாக இருப்பதாகவும் கேரி பதிவில் குறிப்பிட்டுள்ளார். கொரோனாவால் இருவரும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். அல்மெடாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து அவர் மீண்டுள்ளார். இப்படியாக கடினமான சூழலிலும் இருவரும் மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்து வருகிறார்கள்.


43 ஆண்டுகளுக்கு முன்பு அல்மெடாவுக்கும் டொனால்டாவிற்கும் திருமணம் நடைபெற்றது. 2013 ஆம் ஆண்டு கணவர் உயிரிழந்த நிலையில் மூத்த மகனுடன் வசித்து வந்தார். அவரும் 2015 ஆம் ஆண்டு இறந்துவிட்ட நிலையில்தான் கேரியை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


source" one india.com

பகிர்வு

எழில் நிலவன்Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,