டிக்கெட் இல்லாமல் விமானத்தில் தனியாக 2700 கிமீ வரை பயணம் செய்த 9 வயது சிறுவன்!
டிக்கெட் இல்லாமல் விமானத்தில் தனியாக 2700 கிமீ வரை பயணம் செய்த 9 வயது சிறுவன்! 7
ஒன்பது வயதான சிறுவன், டிக்கெட் இல்லாமல் விமானத்தில் உலகைச் சுற்றிப் பார்ப்பது எப்படி என்று இன்டர்நெட் மூலம் கற்றுக்கொண்டு, டிக்கெட்டே இல்லாமல் தன்னந்தனியாக விமானத்தில் 2700 கிலோ மீட்டர் வரை பயணம் செய்துள்ளான்.
பிரேசில் நாட்டில் உள்ள மனாஸ் நகரைச் சேர்ந்த ஒன்பதே வயதான இமானுவல் மார்க்கஸ் டி ஒலிவைரா என்ற சிறுவன் விமானத்தில் டிக்கெட் இல்லாமலே யாருக்கும் தெரியாமல் எப்படிப் பயணிப்பது என்பதை இன்டர்நெட் வழியாகத் தெரிந்து கொண்டுள்ளான். பின்னர் அதை செய்து பார்க்க வேண்டும் என்று தன்னந்தனியாக பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி, டிக்கெட் இல்லாமலே 2700 கிலோ மீட்டர் வரை விமானத்தில் பயணித்துள்ளான். பின்னர் அந்தச் சிறுவன் அவரது நாட்டின் வடமேற்கிலிருந்து வெகு தொலைவில் உள்ள இடத்தில் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டார்.
இது குறித்து கூறும் இமானுவேலின் தாய், "நான் காலை 5:30 மணிக்கு எழுந்தேன், அவன் (இமானுவேல்) அறைக்குச் சென்றேன், அவன் சாதாரணமாக தூங்குவதைப் பார்த்தேன். பின்னர் நான் எனது கைப்பேசியைக் கொஞ்சம் பார்த்துவிட்டு, காலை 7:30 மணிக்கு மீண்டும் எழுந்தேன். அப்போதுதான் அவன் படுக்கையறையில் இல்லை என்பதை உணர்ந்தேன், அதன் பின்தான் நான் பயப்பட ஆரம்பித்தேன்" என்று கூறினார்.
ஒன்பது வயது சிறுவனின் இந்த துணிச்சலைக் கண்டு அந்த சிறுவனின் பெற்றோரும் காவல்துறையினரும் வியப்படைந்துள்ளனர். மேலும் ஒருவர் எந்த டிக்கெட்டும் அடையாள அட்டையும் இல்லாமல் விமானத்தில் எப்படி பயணிக்க முடிந்தது என்று பிரேசில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
Comments