ரோஜா செடி கொத்துக் கொத்தாய் பூத்துக் தள்ளுவதற்கு 2 வாழைக்காய்

 உங்கள் வீட்டில் ரோஜா செடி கொத்துக் கொத்தாய் பூத்துக் தள்ளுவதற்கு 2 வாழைக்காய் இருந்தால் போதுமே!செடி வளர்க்க விரும்புபவர்கள் முதலில் தேர்ந்தெடுக்கும் செடியாக இருப்பது ரோஜா செடி தான்! ரோஜா செடி அழகிலும், அதன் வண்ணங்களிலும் நம் மனதை கவர்ந்துள்ளது. ஆண், பெண் வித்தியாசமின்றி அனைவரும் விரும்பும் இந்த ரோஜா செடியை வீட்டில் வளர்ப்பவர்கள் செயற்கை உரங்களை காட்டிலும், இயற்கை உரங்களைக் கொடுத்து வந்தால் ஒரு கிளையில் 20 மொட்டுக்கள் அசால்டாக பூக்கும். அந்த வகையில் வாழைக்காய் எப்படி ரோஜா செடிக்கு உரம் ஆகிறது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்


ஒரு செடி நன்கு செழித்து வளர்வதற்கு தேவையான சத்துகளில் மெக்னீசியமும், நைட்ரஜன் சத்தும் முக்கியமாக அடங்கியுள்ளது. இலைகள் பச்சை பசேலென அடர்த்தியான நிறம் பெறுவதற்கும், உலர்ந்து காய்ந்து விடாமல் இருப்பதற்கும் தேவைப்படக்கூடிய இந்த சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது வாழைப்பழத்தில் தான். வாழைப்பழத்தில் மட்டுமல்லாமல், வாழைக் காயிலும் இந்த சத்துக்கள் ஏராளம் உள்ளன. நல்ல பழுக்காத காயாக இருக்கும் வாழைக்காய் 2 எடுத்துக் கொள்ளுங்கள்.


அதில் இருக்கும் நைட்ரஜன் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் முழுவதும் கிடைப்பதற்கு அதை இரண்டிலிருந்து, மூன்று நாட்கள் வரை நன்கு புளிக்க விட வேண்டும். ஒரு லிட்டர் அளவிற்கு தண்ணீரில் இரண்டு வாழைக்காய்களை தோலுடன் அப்படியே சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள். 3 நாட்கள் அப்படியே புளிக்க விட்டு விடுங்கள். அதன் பிறகு அதன் மேல் பகுதியில் புளித்தது போல நுரைக்க ஆரம்பித்திருக்கும்.

நுரைத்த பின்பு இதை அப்படியே நன்கு வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் தேவையான அளவிற்கு தண்ணீர் அல்லது அரிசி கழுவிய நீர் சேர்த்து ரோஜா செடிகளின் வேர்ப்பகுதியை லேசாக கிளறி விட்டு ஊற்றி விடலாம். மாதம் இரண்டு முறை இப்படி ரோஜா செடிகளுக்கு இந்த தண்ணீரை ஊற்றி வர, நைட்ரஜன் மற்றும் மக்னீசியம் சத்து இயற்கையாக அதற்கு கிடைத்து நல்ல பச்சை பசேலென அதிக பூக்கள் கொத்து கொத்தாக பூக்க ஏதுவானதாக இருக்கும்.


ரோஜா செடி மட்டுமல்லாமல் பொதுவாகவே எல்லா பூச்செடிகளுக்கு, காய்கறிச் செடிகளுக்கு தேவையான சத்து தான் இது! எனவே ரோஜா செடிக்கு மட்டுமல்லாமல் எல்லா பூச்செடி மற்றும் காய்கறி செடிகளுக்கும் இதனை தெளித்து வரலாம். மாதம் இரண்டு முறை கொடுத்தால் போதும், ஒரு பைசா செலவில்லாமல் செடிகளை செழிக்க செய்து விடலாம்.


நீங்கள் இந்த கலவையை தயாரிக்கும் போது தண்ணீருக்கு பதிலாக அரிசி களைந்த நீரையும் பயன்படுத்தலாம். எப்பொழுதும் அரிசியை முதல் தண்ணீரை பயன்படுத்தி களைந்த பின்பு, இரண்டாம் முறை தண்ணீர் ஊற்றும் பொழுது அந்த தண்ணீரை வீணடித்து விடக்கூடாது. அதில் இருக்கும் சத்துக்கள் ஏராளம், எனவே அதனை செடிகளுக்கு இது போல உரமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் முட்டை வேக வைத்த தண்ணீர், உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீர், காய்கறிகள் வேக வைத்த தண்ணீர் போன்றவற்றை கூட இதற்கு பயன்படுத்தி பயனடையலாம். நாம் செயற்கை முறையை கையாளுவதை விட, இயற்கையாக கிடைக்கும் பொருட்களில் இருக்கும் சத்துக்களை தெரிந்து வைத்திருந்தால் அதிக செலவில்லாமல், ரசாயன கலவைகள் இல்லாமல் நம் வீட்டு செடிகளை பசுமையாக பூக்கச் செய்யலாம்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,