ஒன்றாக இணைந்த 3 “கேலக்ஸிகள்”

 

ஒன்றாக இணைந்த 3 “கேலக்ஸிகள்”: சிலிர்க்க வைக்கும் புகைப்படங்களை வெளியிட்ட ஹப்பிள்

ஹப்பிளின் அவதானிப்புகள் மூலம் பெறப்பட்ட அற்புதமான, வேடிக்கையான விண்மீன் திரள்கள் குறித்து நடத்தப்படும் கேலக்ஸி ஜூ என்ற அறிவியல் ஆய்வின் ஒரு பகுதியாக இந்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.



three galaxies merging 681 million light years away : ஹப்பிள் ஸ்பேஸ் டெலிஸ்கோப், 618 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருக்கும் கேன்சர் விண்மீன் திரள்களில் மூன்று கேலக்ஸிகள் ஒன்றாக இணையும் காட்சிகளை புகைப்படமாக வெளியிட்டுள்ளது. இந்த மூன்று விண்மீன் திரள்களின் ஈர்ப்பால் உருவான சிதைவுகளின் கலவை மற்றும் நட்சத்திரங்களின் உருவாக்கத்தை இந்த டெலிஸ்கோப் படம் பிடித்துள்ளது.

விண்மீன் கூட்டங்கள் ஒன்றோடு ஒன்று இணைவதாக இருந்தாலும் கூட, ஒன்றுடன் மற்றொன்று மோதிக் கொள்ளும் சம்பவங்கள் மிகவும் அரிதாகவே நிகழ்கிறது. ”கால்பந்தாட்ட மைதான இடைவெளியில் தனித்தனித்து நிற்கும் மணல் துகள்கள் தான், விண்ணில் இருக்கும் நட்சத்திரங்களுக்கு இடையேயான இடைவெளி” என்று நாசா அடிக்கடி மேற்கோள்காட்டுவதுண்டு. ஒரு விண்மீன் திரள் மற்றொரு விண்மீன் திரளுடன் இணையும் போது தன்னுடைய சொந்த வடிவத்தை இழந்து நீள்வட்டத்தில் புது வடிவத்தை விண்மீன் திரள்கள் பெறுகின்றன.



ஆனால் இந்த புகைப்படத்தின் மையத்தில் படர்ந்திருக்கும் புகை மண்டலம் வேறொரு முக்கிய நிகழ்வை குறிப்பதாகும். பொதுவாக விண்மீண் திரள்கள் இணையும் போது வாயு மற்றும் தூசி மேகங்கள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து, மோதி புதிய நட்சத்திரங்களை உருவாக்குகின்றன.

ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையமான இ.எஸ்.ஏ தரவுகளின் படி, ஹப்பிளின் அவதானிப்புகள் மூலம் பெறப்பட்ட அற்புதமான, வேடிக்கையான விண்மீன் திரள்கள் குறித்து நடத்தப்படும் கேலக்ஸி ஜூ என்ற அறிவியல் ஆய்வின் ஒரு பகுதியாக இந்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

900,000 ஆய்வு செய்யப்படாத விண்மீன் திரள்களை வகைப்படுத்த 100,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களிடம் இருந்து உதவியை திரட்டி 175 நாட்களில் இந்த திட்டத்தின் முக்கிய இலக்கை இ.எஸ்.ஏ அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு வானியல் ஆராய்ச்சியாளாரால் பல்லாண்டுகளில் செய்து முடிக்கப்பட வேண்டிய பணிகளை மிகக் குறைந்த காலகட்டத்தில் முடித்துவிட்டோம் என்று கூறியுள்ளது இ.எஸ்.ஏ.

thanks
https://tamil.indianexpress.com/

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்: