30 நாட்களில் 3 இன்ச் அளவு முடியை வளர வைக்க, இந்த ஒரு ஹேர் ஆயில் போதுமே

 30 நாட்களில் 3 இன்ச் அளவு முடியை வளர வைக்க, இந்த ஒரு ஹேர் ஆயில் போதுமே
முடி உதிர்வதை உடனடியாக நிறுத்த, முடி வளர்ச்சியை உடனடியாக அதிகரிக்க, வழுக்கையான இடத்திலும் உடனடியாக முடி வளர எல்லோரும் பயன்படுத்தக்கூடிய ஒரு ஹேர் ஆயில் எப்படி தயார் செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த தேங்காய் எண்ணெயை தடவினால், சளி பிடிக்கும், தலைபாரம் வரும், என்ற கவலை கூட கிடையாது. பின் சொல்லக்கூடிய அளவுகளில் இந்த ஹேர் ஆயிலை உங்கள் வீட்டிலேயே உங்கள் கையாலேயே தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு மாதம் வரை இந்த தேங்காய் எண்ணெய் கெட்டுப்போகாது. சரி அந்த அற்புதமான தேங்காய் எண்ணெய்யை எப்படி தயார் செய்வது தெரிந்துகொள்வோம் வாருங்கள்


முதலில் இந்த ஹேர் ஆயில் தயாரிக்க தேவையான பொருட்களை பார்த்துவிடலாம். 1 டேபிள்ஸ்பூன் வெந்தயம், 1 கைப்பிடி கறிவேப்பிலை, 5 செம்பருத்தி இலைகள். கறிவேப்பிலையையும், செம்பருத்தி இலையையும் முன்பே தண்ணீரில் நன்றாக அலசி தண்ணீரை சுத்தமாக துடைத்து காயவைத்துக் கொள்ள வேண்டும். இலையில் தண்ணீர் இருக்கக்கூடாது.

இந்த 3 பொருட்களையும் மிக்ஸியில் போட்டு அரைக்கவேண்டும். மிக்ஸி ஜாரில் ஒரு சொட்டு தண்ணீர் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எடுத்து வைத்திருக்கும் மிக்ஸி ஜாரில் வெந்தயம், கருவேப்பிலை, செம்பருத்தி இலை இந்த மூன்று பொருட்களையும் போட்டு தண்ணீர் எதுவும் ஊற்றாமல் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

மிக்ஸி ஜாரில் நான் அறைத்து வைத்திருக்கும் இந்த விழுதுக்கு 300ml அளவு மரச் செக்கு தேங்காயெண்ணை சரியாக இருக்கும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெயை மிதமான தீயில் சூடு செய்ய வேண்டும். எண்ணெய் சூடு ஆன பின்பு மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் இந்த விழுதையும் எண்ணெயில் போட்டு விடுங்கள். (முடி ரொம்ப சீக்கிரம் வளர வேண்டும் என்பதற்காக வெந்தயம் கருவேப்பிலை செம்பருத்தி இலையை இன்னும் கொஞ்சம் கூட சேர்த்து கொள்ளலாம் என்று நிறைய சேர்க்கக்கூடாது. சில பேருக்கு அது முடி உதிர்வைக் கொடுத்துவிடும். மேலே சொன்ன அளவுகளை பின்பற்றி எண்ணெயை தயாரித்துக் கொள்ளுங்கள்.)


விழுதை எண்ணெயில் போட்டதும் எண்ணெய் சடசடவென பொரிய தொடங்கும். எண்ணெயில் இந்த மூன்று பொருட்களும் நன்றாக காய்ந்து அடங்கியவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள். அடுப்பை வேகமாக வைக்கக்கூடாது. உள்ளே போட்டிருக்கும் பொருட்கள் கருகி விடும். ஆனால் அந்த பொருட்களில் இருக்கும் சாறு எண்ணெயில் இறங்காமல் போய்விடும். ஆகவே அடுப்பை சிம்மில் வைத்து விட்டு இந்த ஹேர் ஆயிலை தயார் செய்தால் மிக மிக நல்லது.


இந்த தேங்காய் எண்ணெயை நன்றாக ஆறிய பின்பு ஒரு வடிகட்டியில் மூலம் வடிகட்டி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால், இந்த எண்ணெயை தினந்தோறும் பயன்படுத்தலாம். தேவைப்பட்டால் வாரத்தில் மூன்று நாட்கள் தலைக்கு குளிப்பதற்கு முன்பாக இந்த ஹேர் ஆயிலை நன்றாக மசாஜ் செய்து தலையில் தடவியும் அதன் பின்பு தலைக்கு குளிக்கலாம். (இந்த எண்ணெய்ப் பார்ப்பதற்கு பச்சை நிறத்தில் அழகாக கிடைத்திருக்கும். திக்காகவும் கிடைத்திருக்கும்.)

courtesy

deivveegam.com
Comments

Popular posts from this blog

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,