பிம்பத்தின் நிஜம் .இலக்கிய விழா







 மார்ச் 4 புத்தக கண்காட்சியில்  பிம்பம் பதிப்பகம் சார்பாக ஒரு சின்ன விழா‘ நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடிய ஒரு இலக்கிய விழா இது







 பிம்பத்தின் நிஜம் என்ற தலைப்பு இந்த  விழாவிற்கு

 . நரசிம்மா அவர்களின் கூடலழகியை பிள்ளையாய் இடையில் சுமந்தபடியேதான் அரங்கம் சென்றார்கள்

 மிஸ்யூ வை மிஸ் பண்ணாமல் விழா மேடையில் வைத்தாகிவிட்டது. கூடவே அவர்களின்  MYELIBன்  சுகமான பயணம்.


 ஆரூர்தமிழ்நாடன் அவர்களின் தலைமையில் நட்பின் அழைப்பாக சிவராமன் ஸாரும், மனுஷ்யப்புத்திரனும் சேர்ந்த பிறகு விழா அருமை

கணேஷ் பாலாவின் வரவேற்புரையில் கமலகண்ணன் அவர்களின் தொகுப்புரையில் நண்பர் இன்பாவின் வாழ்த்துரையில் விழா தொடங்கியது.


பிம்பம் பதிப்பகத்தில் வெளியான அனைத்து நூல்களும் அங்கே கொஞ்சி விளையாடியது மேடையில் இருப்பவர்களின் கரங்களில் ! முயற்சியைத் தட்டிக் கொடுத்து இன்னமும் ஏற்றம் பெற வேண்டும் என்ற முனைப்பு வார்த்தைகளை சிவராமன் சொல்லி வாழ்த்தினார்

. மனுஷ்யபுத்திரன் அவருடனான  முதல் சந்திப்பில் இருந்து பேசி தற்போதைய வளர்ச்சி வரை பேசி பரவசமூட்டினார்.நரசிம்மாஅவர்களின்  புதினம் பத்துமலை பந்தத்தைப் போல மின் கைத்தடி  குடும்பத்தின் இணை பந்தமென அவர் மாறிப்போயிருக்கிறார் என்பதை அங்கே காணமுடிந்தது


,இந்த விழாவிற்கு  வந்து கலந்து கொண்ட  பீப்பிள் டூடே கௌரவ ஆசிரியர் உமாகாந்தன் அவர்கள், திரு  பொன்மூர்த்தி, திருமதி  சாரதாகிருஷ்ணன், நகைச்சுவை அரசர்கள் சிரிப்பானந்தா, சித்திரைசிங்கர், இளம் சரித்திர எழுத்தாளர் வில்லரசன், MYELIB CEO நேமிதாஸ் மற்றும் அவர்களுடன் வந்த பாக்கெட் எப்.எம் டீம் மெம்பர்ஸ், அமெரிக்க முத்தமிழ் தமிழ் சங்கத் தலைவர் அய்யா தாழை.உதயநேசன், விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து டிஸ்கவரி புக் பேலஸ் நண்பர் வேடியப்பன், வாசகியென கலந்து கொண்ட கனராபேக் ஊழியர் ஜெயா இவர்களுக்கு  எழுத்தாளர் லதா சரவணன் நன்றி தெரிவித்தார்

விழாவின் துவக்கத்தில் இருந்து புத்தகங்கள் கொடுத்து அக்கறையாய் அதைமேடையில் விருந்தினர்களுக்குச் சேர்த்த செல்வி  அபிநயா , நவீன் இருவருக்கும் அவர் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்

செய்தி :பீப்பிள் டுடே 

புகைப்படங்கள்:

மின்கைத்தடி இணைய குழுமம்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,