4 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் துபாய் மற்றும் அபுதாபி நாடுகளில்


 4 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் துபாய் மற்றும் அபுதாபி சென்றுள்ளார். துபாய் சென்ற முதல்வர் ஸ்டாலினை இந்திய தூதர் ஜெனரல் அமீர் பூரி மற்றும் அமீரக அமைச்சர்கள் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

துபாயில் நடக்கும் உலக அளவிலான எக்ஸ்போவில் தமிழ்நாட்டின் அரங்கை திறந்து வைப்பதற்காக துபாய் சென்றுள்ளார். இதையடுத்து நேற்று துபாய் எக்ஸ்போவை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் பல்வேறு தொழிலதிபர்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார்.

இந்த நிலையில் துபாய் சென்று இருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வரை அமீரக வாழ் தமிழர்கள் சிறப்பாக வரவேற்று உபசரித்து வருகின்றனர். இந்த நிலையில்தான் இன்று துபாய் எக்ஸ்போவை காண முதல்வர் ஸ்டாலின் திறந்த வாகனம் ஒன்றில் பயணித்தார். அவருடன் துர்கா ஸ்டாலினும் அதே வாகனத்தில் அமர்ந்து இருந்தார். அமீரக அமைச்சர்கள் இந்த வாகனத்தில் இருந்தனர்.அதேபோல் அடுத்த வாகனத்தில் உதயநிதி ஸ்டாலின் இருந்தார். மேலும் ஐஏஎஸ் அதிகாரிகள், தமிழ்நாடு அரசு அதிகாரிகளும் இந்த காரில் இருந்தனர். இந்த காரை சுற்றி தமிழர்கள் நின்று அவர்களுக்கு வரவேற்பு கொடுத்தனர். அப்போது அங்கு இருந்த துபாய் தமிழர் ஒருவரிடம் பேசிய துர்கா ஸ்டாலின்.. ஏற்பாடு நன்றாக இருக்கிறது. நன்றிங்க.. போயிட்டு வரேன் என்று காரில் நகர்ந்தபடி கூறினார்.Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,