74 வயதில் ஆட்டோ ஓட்டும் ஆங்கில பேராசிரியர்

. 74 வயதில் ஆட்டோ ஓட்டும் ஆங்கில பேராசிரியர்



 ஆங்கில பேராசிரியர்74 வயதிலும் தளராமல் ஆட்டோ ஓட்டி சுய சம்பாத்தியத்தில் வாழ்க்கை நடத்தி வருகிறார்.




நாட்டில் வேலையின்மை, பணப்புழக்கம் இல்லை என கூறி கொண்டு எந்த வேலைக்கும் செல்லாமல், மற்றவர்களை புறம்பேசி கொண்டு இருப்பவர்கள் மத்தியில் 74 வயதிலும் சுய சும்பாத்தியத்தில் வாழ்க்கையை நடத்தி வருபவர் பற்றி நிகிதா என்ற பெண் சமூக ஊடகத்தில் பதிவிட்டு உள்ளார்.

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் காலையில் நிகிதா அவசர அவசரமாக பணிக்கு கிளம்பினார்.  ஆனால், அவர் பயணித்த ஊபர் ஆட்டோ ஓட்டுனர் நெடுஞ்சாலையில், அவரை நடு வழியில் இறக்கி விட்டு விட்டு சென்று விட்டார்.

என்ன காரணமோ, வெயிலில் நின்றிருந்த அவரை நோக்கி மற்றொரு ஆட்டோ வந்தது.  அதில் வயது முதிர்ந்த நபர், நிகிதாவை நோக்கி எங்கே செல்ல வேண்டும்? என கேட்கிறார்.

நகரின் அந்த பகுதியில் உள்ள தனது அலுவலகத்திற்கு செல்ல வேண்டும்.  ஏற்கனவே காலதாமதம் ஆகி விட்டது என பதிலளிக்கிறார்.  இதற்கு அந்த முதியவர், உள்ளே வாருங்கள் மேடம்.  நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ அதனை கொடுங்கள் என ஆங்கிலத்தில் பேசி அசர வைத்துள்ளார்.

அவரது கருணையான அணுகுமுறையால், சரி என்று கூறிய நிகிதாவின் 45 நிமிடங்கள் போவதே தெரியாமல் இருந்துள்ளது.  ஆட்டோ ஓட்டுனரிடம் ஆர்வமுடன், எப்படி இதுபோன்று நல்ல முறையில் ஆங்கிலத்தில் பேசுகிறீர்கள்? என கேட்டுள்ளார்.

அதற்கு அவர், நான் மும்பையில் கல்லூரி ஒன்றில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றி உள்ளேன்.  எம்.ஏ., எம்.எட். முடித்துள்ளேன் என கூறியுள்ளார்.  நிகிதாவின் அடுத்த கேள்வியையும் அவரே கேட்டு உள்ளார்.

பின்னர் ஏன் ஆட்டோ ஓட்டுகிறீர்கள் என நீங்கள் என்னிடம் கேட்க போகிறீர்கள், சரியா? என்று கேட்டுள்ளார்.  அதற்கு ஆம் என பதில் வந்ததும், தனது கடந்த கால வாழ்க்கையை அவர் விவரிக்கிறார்.

அவரது பெயர் பட்டாபி ராமன் என்றும் கல்லூரி விரிவுரையாளர் பணியில் இருந்து ஓய்வு பெற்றதில் இருந்து 14 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறார் என்றும் கூறியுள்ளார்.

கர்நாடகாவில் எந்த வேலையும் கிடைக்காத சூழலில் மும்பையில் விரிவுரையாளராக சேர்ந்துள்ளார்.  கர்நாடகாவில் வேலை கேட்டு சென்ற இடத்தில் அவரிடம் கேட்கப்பட்ட ஒரே கேள்வி, உங்களது சாதி என்ன? என்பதே.

அதற்கு அவர் எனது பெயர் பட்டாபி ராமன் என கூறியிருக்கிறார்.  அதற்கு அவர்கள் என்ன கூறினார்கள் என்று உங்களுக்கே தெரியும் என்று நம்மிடம் கூறி நிகிதா முடித்து விடுகிறார்.

கர்நாடகாவிலுள்ள கல்லூரிகளில் இருந்து இதுபோன்ற பதில்களை பெற்று மனமுடைந்த ராமன், மராட்டியத்தின் மும்பை நகரில் பொவாய் என்ற இடத்தில் உள்ள ஒரு மதிப்புமிக்க கல்லூரியில் பணியில் சேர்ந்துள்ளார்.

20 ஆண்டுகள் பணியாற்றி 60 வயதில் ஓய்வு பெற்றார்.  மீண்டும் பெங்களூரு நகருக்கு திரும்பியுள்ளார்.  அதன்பின் அவர் கூறும்போது, ஆசிரியர்களுக்கு சரியான சம்பளம் இல்லை.  அதிகபட்சம் 10 முதல் 15 ஆயிரம் சம்பளம் கிடைக்கும்.  தனியார் நிறுவனம்.  அதனால், ஓய்வூதியமும் கிடையாது.

ஆட்டோ ஓட்டுவதில் நாளொன்றுக்கு ரூ.700 முதல் ரூ.1,500 வரை கிடைக்கிறது.  அது எனக்கும் எனது கேர்ள்பிரண்டுக்கும் போதும் என கூறுகிறார்.  அவர் கேர்ள்பிரண்டு என கூறியதும் சிரித்த நிகிதாவிடம், மனைவியை நீங்கள் எப்போதும் சமஅளவில் நடத்த வேண்டும்.  அதனாலேயே அப்படி கூறினேன்.

மனைவி என்று கூறிய அடுத்த நிமிடம், அவள் ஓர் அடிமை.  நமக்கு சேவை செய்ய வேண்டும் என கணவன் நினைக்க தொடங்கி விடுவான்.  ஆனால், எனது மனைவி எந்த வகையிலும் எனக்கு குறைந்தவர் இல்லை.  சில நேரங்களில் அவர் என்னை விட உயர்ந்தவராகவும் ஆகி விடுவார் என விளக்கம் கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து, தங்களுக்கு ஒரு மகன் இருக்கிறார் என்றும் வீட்டு வாடகை தொகையை கொடுத்து உதவுவார் என்றும் கூறியுள்ளார்.  அதற்கு மேல் எங்களுடைய குழந்தையை சார்ந்து நாங்கள் இல்லை.  அவர்களுடைய வாழ்க்கையை அவர்கள் வாழ்கிறார்கள்.  நாங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கிறோம் என ராமன் கூறியுள்ளார்.

74 வயதிலும், தனது வாழ்க்கையை பற்றி அவர் ஒரு குறையோ, வருத்தப்பட்டு பேசவோ இல்லை.  இதுபோன்ற மறைந்திருக்கும் ஹீரோக்களிடம் இருந்து கற்று கொள்ள வேண்டியது நிறைய உள்ளது என நிகிதா நிறைவாக கூறியுள்ளார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,