வாழ்த்துகள் தமிழ் முகவரியே/ முதல்வருக்கு வாழ்த்து கவிதை
வாழ்த்துகள் தமிழ் முகவரியே..
*************−−−−−−−*************
ஆரூர் மண்ணெடுத்து
அழகு தமிழ் சொல்லெடுத்து
முத்துவேல் குடும்பத்தில் முத்தாய்ப் பிறப்பெடுத்து
கலைஞரின் கவிதையாய்
கவியெடுத்து
தமிழரின் தவப்புதல்வனாய்
தவமெடுத்து
தமிழின் வளர்ச்சிக்கு தனிவடிவம் கொடுத்து
தமிழன் சரித்திரத்தில் தனி
இடம்பிடித்து
தமிழனுக்கொரு தனிமுகவரி
தந்த தங்கத்தமிழனே
எங்கள் சிங்கமுதல்வனே
தொல்லை தந்தது கொள்ளைக்கூட்டம்
கொல்லைபுறம் வேண்டாமென
கொள்கைகொண்ட கோபாலபுர கோமகனே
வாசல்வழி வந்தமர்ந்த
திருக்குவளை திருமகனே
இசையும் அசையும் உன்
ஊனில் ஊறிய இன்பமன்றோ
எதிர்வினைக்கு உன் புன்னகையொன்றே பரிசளிக்கிறாயே..
பரிகாச கூட்டங்கள் அங்கே பரிதவிக்குது
பட்டினத்தாரும் பாமரரும்
பக்காவாய் இப்போது உன்கூட்டம்
எதிராளி என்ன சொல்லியும் எடுபடவில்லை
எல்லாம் நாடி நீ தருகிறாய்
எதைத்தேடி நாங்கள் தருவது
இனி எப்போதும்
வாழ்த்துகள் எம் முதல்வனே..
Comments