Thursday, March 10, 2022

இயக்குநர் எஸ்.டி.சுந்தரம்

 


 • இயக்குநர் எஸ்.டி.சுந்தரம்
 • ஒரு இந்தியத் தமிழ் எழுத்தாளர், நாடகாசிரியர், நடிகர், கவிஞர், திரைப்பட இயக்குநர் ஆவார்.
 • எஸ். டி. சுந்தரம் தமிழ் எழுத்தாளர், நாடகாசிரியர், நடிகர், கவிஞர், திரைப்பட இயக்குநர். சேலம் துரைசாமி சுந்தரம் எனும் எஸ். டி. சுந்தரம் சேலம் மாவட்டம் ஆத்தூரில் 1921 ம் ஆண்டு ஜூலை 22 ம் தேதி பிறந்தார்.
 • இவர் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், பட்டினத்தார் பாடல்கள், வள்ளலாரின் திருவருட்பா எல்லாம் இவருக்கு மனப்பாடம். தனது 12 ஆவது வயதில் நவாப் இராஜமாணிக்கம் நாடகக் குழுவில் சேர்ந்தார். இவருக்கிருந்த தமிழ்ப் புலமையைக் கண்ட நவாப் ராஜமாணிக்கம் இவரை 1934 ஆம் ஆண்டு திருவையாறு அரசு கலைக் கல்லூரியில் சேர்த்தார். அங்கு தமிழ் வித்வான் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.
 • 1942 ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதனால் சிறைத்தண்டனை பெற்றார். தஞ்சாவூர் சிறையில் 9 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார்.
 •  சிறைவாசத்திலிருந்துவிடுதலையானதும் மீண்டும் நவாப் இராஜமாணிக்கம் நாடகக் குழுவில் சேர்ந்தார். சிறையிலிருந்த போது கவியின் கனவு என்ற நாடகத்தை எழுதியிருந்தார். இது பெரும்பாலும் நாட்டு விடுதலை பற்றிய அவரின் சொந்தக் கனவை வைத்தே எழுதப்பட்டது. 1945 ஆம் ஆண்டு குருநாதர் ஆசியுடன் இவரும் சக்தி கிருஷ்ணசாமியும் இணைந்து சக்தி நாடக சபாவைத் தொடங்கி இவரது கவியின் கனவு நாடகத்தை அரங்கேற்றினார்கள். இந்த நாடகத்தில் சிவாஜி கணேசன், எம். என். நம்பியார், எஸ். வி. சுப்பையா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர்
 • கவியின் கனவு நாடகம் மிகவும் புகழ் பெற்று 1500 தடவைகளுக்கு மேல் மேடையேறியது. ஒரு தடவை நாகப்பட்டினத்தில் இந்த நாடகம் அரங்கேறியபோது கவியின் கனவு ஸ்பெஷல்என ஒரு சிறப்பு ரயில் திருச்சியிலிருந்து விடப்பட்டதாம். 
 • 1946 ஆம் ஆண்டு ம். ஜி. ஆர். - வி. என். ஜானகி முதன்முதலாக இணை சேர்ந்து நடித்த மோகினி திரைப்படத்துக்கு கதை வசனம், பாடல்கள் எழுதினார்.
 • 1953ஆம் ஆண்டு மனிதனும் மிருகமும் என்ற திரைப்படத்தை கே. வேம்புவுடன் சேர்ந்து இயக்கினார். சிவாஜி கணேசன்மாதுரிதேவிகே. சாரங்கபாணிடி. ஆர். ராமச்சந்திரன் இத்திரைப்படத்தில் நடித்தனர்.
 • 1962ஆம் ஆண்டு இந்தியா-சீனா போரின் போது சிங்கநாதம் கேட்குது, சீன நாகம் ஓடுது என்ற ஆவணப்படத்தைத் தன் சொந்தச் செலவில் தயாரித்து வெளியிட்டார். தமிழ்நாட்டின் பட்டி தொட்டிகளிலெல்லாம் திரையிடப்பட்ட இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன் உட்பட புகழ் பெற்ற நடிகர்கள் பலரும் நடித்திருந்தனர்.

 • வசனம், பாடல்கள் எழுதிய திரைப்படங்கள்: மோகினி, லைலா மஜ்னு, கள்வனின் காதலி, மனிதனும் மிருகமும், விப்ர நாராயணா, சாரங்கதாரா, கப்பலோட்டிய தமிழன்
 • கவிஞர் எஸ்.டி.சுந்தரம்
  அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
  01.
  இந்தியா எங்கே?
  02.
  கவியின் கனவு (நாடகம்)
  03.
  சிரிப்பதிகாரம்
  04.
  வானமுதம் (கவிதை)
  05.
  வீரசுதந்திரம்
 • கல்கியின் நாவலுக்கு வசனம் எழுதியவர்... ‘கப்பலோட்டிய தமிழன்’ டயலாக் ரைட்டர்...

 •  சட்ட மேலவை உறுப்பினர்... சீர்காழி பாடிய பக்திப் பாடல்களின் பாடலாசிரியர்..
 • பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பழைய பாடல்களில் ஒன்று -
 • அன்பொளி வீசி
 • உயிர் வழிந்தாடும்
 • விழியில் மான்
 • கண்டேன் - தன் இதழ்
 • ஓசை இசையினில்
 • வாணியின்
 • வீணையை நான்
 • கேட்டேன்
 • பசும் பொன்னுடல்
 • வாரி வீசிய ஜோதியில்
 • வாட்டிய குளிர்
 • உணர்ந்தேன் - பின்னவள்
 • அருகே
 • புன்னகையோடு வர
 • என்னை
 • நான் மறந்தேன் ....

 • மந்திரி குமாரி’ படத்தில் ராஜகுரு எம்.என்.நம்பியாரின் மகனாக தோன்றி ‘கொலை அல்ல, அது கலை...’ என்று மந்தகாச சிரிப்போடு ஹீரோ ரேஞ்சுக்கு பேசப்பட்ட வில்லன் நடிகர் எஸ்.ஏ.நடராஜன் தயாரித்த ‘கோகிலவாணி’ படத்தில் இடம் பெற்ற பாடலிது. இசைமேதை ஜி.ராமநாதன் இசையில் ஒலித்த இந்த பாடலை எழுதியவரை பாடலாசிரியர் என்று மட்டும் சுருக்கிட முடியுமா?சுதந்திரப் போராட்ட வீரர், திரைப்பட இயக்குநர், நாடக ஆசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், தமிழ் வித்வான், சட்டமன்ற மேலவை உறுப்பினர், இயல், இசை, நாடக மன்றச் செயலாளர், கவிஞர் என அவருக்கு இன்னும் பல அடையாளங்கள் உண்டு
 • 1953ம் ஆண்டு சிவாஜிகணேசன், மாதுரி தேவி, டி.ஆர்.ராமச்சந்திரன், எம்.என்.ராஜம் உள்ளிட்டோர் நடித்த ‘மனிதனும் மிருகமும்’ படத்தை தயாரித்ததுடன், கதை, வசனம், பாடல்கள் ஆகியவற்றை எஸ்.டி.சுந்தரம் எழுதினார். அத்துடன் கே.வேம்புவுடன் இணைந்து இப்படத்தை இயக்கவும் செய்தார். இப்படத்தில் ஜி.கோவிந்தராஜுலு நாயுடு இசையில் 7 பாடல்களை எஸ்.டி.சுந்தரம் எழுதினார்.

 • காலமெனும்
 • சிற்பி செய்யும்
 • கவிதைத் தாய்க்
 • கோயிலடா
 • கோலமின்னும்
 • இயற்கை அருள்
 • கோடி மலர்த்
 • தோட்டமடா...

 • என்று இசைச் சித்தர் சி.எஸ்.ஜெயராமன் குரலில் ஒலிக்கும் தத்துவப்பாடல் கேட்பதே சுகானந்தம். இந்தப் பாடல் அடங்கிய ‘வானமுதம்’ என்ற எஸ்.டி.சுந்தரத்தின் நூலை 1964ம் ஆண்டு ‘சுதேசமித்திரன்’ அச்சகம் வெளியிட்டது. கர்மவீரர் காமராஜருக்கு எஸ்.டி.சுந்தரம் இந்நூலை காணிக்கையாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.‘மனிதனும் மிருகமும்’ படத்தில் எம்.எல்.வசந்தகுமாரியின் சங்கீத இசையைப் பருகும் வகையில் எஸ்.டி.சுந்தரம் ஒரு பாடலை எழுதியிருந்தார்
 • .1958ம் ஆண்டு வி.ராமநாதன் இயக்கத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், சி.ஆர்.விஜயகுமாரி, பண்டரிபாய், டி.பி.முத்துலட்சுமி நடித்த ‘பெற்ற மகனை விற்ற அன்னை’ படத்தில் மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், டி.கே.ராமமூர்த்தி இசையில் டி.எம்.சௌந்தரராஜன், பி.லீலா இணைந்து பாடிய,

 • காலமென்னும்
 • காட்டாறு
 • கரை மீறி ஓடுதடா
 • கேலிமிகும்
 • உலகெல்லாம்
 • காலம் செய்யும்
 • பாவமடா...
 • பாடல் எஸ்.டி.சுந்தரத்தை திரையிசை ரசிகர்களுக்கு நினைவூட்டிக் கொண்டேயிருக்கிறது.
 • .தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராக 1964ம் ஆண்டு முதல் 1968ம் ஆண்டு வரை செயல்பட்டுள்ளார். 1968ம் ஆண்டு முதல் 1976ம் ஆண்டு வரை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளராகவும் எஸ்.டி.சுந்தரம் பணியாற்றியுள்ளார்

 • . தமிழக அரசு இவருக்கு 1979ம் ஆண்டு பாரதிதாசன் விருது வழங்கியதுடன் இவருடைய நூல்களை நாட்டுடமையாக்கியது.
 • 1979 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8-ந் தேதி சென்னை வானொலி விவித் பாரதியின் தேன் கிண்ணம் நிகழ்ச்சி ஒலிப்பதிவில் கலந்து கொண்டார். இதுவே இவரது கடைசி நிகழ்ச்சியாக அமைந்தது. இந்த நிகழ்ச்சி அவர் இறந்த அன்று ஒலிபரப்பானது. 1979 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10-ம்தேதி மாரடைப்பால் காலமானார்.

 • தகவல் சேகரித்து
 • பதிவு :  எழில் நிலவன்


No comments:

Featured Post

பூக்களால் உருவாக்கப்பட்ட வீடு.

  பூக்களால் உருவாக்கப்பட்ட வீடு.. கண்ணை கவரும் உதகை ரோஜா மலர் கண்காட்சி ! நீலகிரியில் ஆண்டுதோறும்  கோடை விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும்  ரோஜ...