ஊரே உங்களைத் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு ஒரு அழகான அழகை பெற,

 ஊரே உங்களைத் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு ஒரு அழகான அழகை பெற,
நாம் வீதியில் நடந்து சென்றால் எல்லோரும் நம்மை திரும்பிப் பார்க்கவேண்டும். அந்த அளவிற்கு நாம் அழகாக இருக்க வேண்டும் என்று எல்லோரும் நினைப்பதுண்டு. அப்படி ஒரு அழகை பெற மிக மிக சுலபமான ஒரு ரெமிடியை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நிறைய செலவு செய்ய வேண்டாம். சமையலுக்காக வாங்கப்படும் இந்த 2 காய்கறிகளை பயன்படுத்தினால் போதும். உங்களுடைய சருமம் ஒரு சில நாட்களிலேயே வெள்ளையாக மாறும்.


இந்த பேக் போட்டு பாருங்களேன் ஊரே உங்களை பார்ப்பதோடு மட்டுமல்லாமல், ‘என்ன செய்து இவ்வளவு வெள்ளையாக மாறின?’ என்ற கேள்வியும் கேட்க தொடங்கிவிடுவார்கள். சரி நேரத்தைக் கடத்தாமல் ரெமிடியை பார்த்து விடலாம். தேவையான பொருள். 1 உருளைக்கிழங்கு, 1 கேரட் இந்த இரண்டு காயையும் தோல் சீவி பொடியாக வெட்டி தண்ணீரில் போட்டு நன்றாக வேக வைத்துக் கொள்ள வேண்டும். குக்கரில் வேக வைத்துக் கொண்டாலும் பரவாயில்லை. கிண்ணத்தில் போட்டு வேக வைத்துக் கொண்டாலும் பரவாயில்லை. அது உங்களுடைய விருப்பம் தான்

காய்கள் நன்றாக வெந்ததும் அதை ஆற வைத்து விட்டு, தண்ணீரோடு சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு மொழுமொழுவென பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த விழுதோடு 2 ஸ்பூன் அளவு ஆலோவேரா ஜெல் சேர்த்து நன்றாக அடித்து கலக்கினால் இது ஒரு ஃபேஸ் பேக் போல நமக்கு கிடைத்துவிடும். இதை அப்படியே காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு ஸ்டோர் செய்து பிரிட்ஜில் வைத்தால் 10 நாட்கள் கெட்டுப் போகாது. நிறைய தண்ணீர் ஊற்றி காய்கறிகளை வேக வைக்க வேண்டாம். கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் ஊற்றினால் பேக் திக்தாக கிடைக்காது.

இந்த பேக்கை முகத்தில் எப்படி அப்ளை செய்வது. முதலில் முகத்தில் இருக்கும் கிரீம் பவுடர் மேக்கப் எல்லாவற்றையும் நீக்கி விடுங்கள். அதன் பின்பு முகத்தை நன்றாக கழுவி விடுங்கள். முகத்தை ஈரம் இல்லாமல் துடைத்து கொள்ள வேண்டும். அடுத்து இந்த க்ரீமை லேசாக உங்களுடைய விரல்களில் தொட்டு முகத்தில் ஆங்காங்கே சீரம் போல சின்ன சின்ன புள்ளிகளாக அப்ளை செய்து, அப்படியே முகம் முழுவதும் தடவி விடுங்கள். கழுத்திலும் இந்த பேக் போட வேண்டும். முகத்தில் கிரீம் போட்டதே தெரியாது. உங்களுடைய முகம் இந்த கிரீமை நன்றாக உறிஞ்சிக்கொள்ளும். (கண்களுக்குக் கீழே கருவளையம். நெற்றியில் கருப்பு இருந்தால், அந்த இடத்தில் கொஞ்சம் திக்காக இந்த பேக்கை போட்டு கொள்ளலாம்.)


அப்படியே 1 மணி நேரம் அல்லது 2 மணி நேரம் விட்டு விடலாம். மீண்டும் குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். தினம்தோறும் இப்படி செய்து வர உங்களுடைய முகத்தில் இருக்கும் கருமை நிறம் படிப்படியாக குறைந்து வெள்ளையாக தொடங்கிவிடும். ஏழு நாட்கள் தொடர்ந்து இந்த ஜெல்லை உங்களுடைய முகத்தில் போட்டு வரும்போது வித்தியாசம் உங்களுக்கே தெரியும்.Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,