மனச்சோர்வு நீக்கும் மலர் மருத்துவம்

 

மனச்சோர்வு நீக்கும் மலர் மருத்துவம்







மலர் மருத்துவம்  குறித்த நமது கேள்விகளுக்கு மலர் மருத்துவ ஆலோசகர்  கற்பகாம்பிகை நம்மிடம் பகிர்ந்தவை

பொதுவாக  தலைவலி துவங்கி உயிரை பறிக்கும் பல கொடிய நோய்கள் நம்மை அதிகம் பாதிக்க ஒரு முக்கிய காரணம் நம் மனம்தான்.

 

எனவே மனதை சரியாக வைத்திருக்க நம் முன்னோர்கள் கடவுள் நம்பிக்கை பிரார்த்தனை போன்றவற்றை பின்பற்றினார்கள்.

நமக்கே  தெரியும் பிரார்த்தனைகளின் போது அதிகம் மலர்கள் பயன் படுததி வருகிறோம்

மலர்களின் நிறம் வடிவம் வாசம் ஆகியவை மனிதனின் மனநிலையை மாற்றும் சக்தி கொண்டதாக  இருக்கிறது

மலர்களை வைத்து மனிதனின் மனதை சீராக்க வைத்திருக்க முடியும்  என்பதை பகிர்ந்து கொண்ட போது அவர் கூறியதாவது:

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பயம், கோபம், பதற்றம்போன்ற மன உணர்வுகள் ஆட்கொண்டு அவர்களது செயல்பாட்டில் தடையை ஏற்படுத்திவிடுகிறது. இவை, மனிதர்களின் மனநலனை மட்டுமின்றி, உடல்நலனையும் பாதிக்கக்கூடும்.

*
மலர்கள் எப்படி மருந்தாகின்றன என கேட்டபோது

சில நோய்களுக்கு பூக்களை நுகர்வதும், சிலவற்றுக்கு பூக்களை தொட்டு உணர்வதுமே மருந்தாகிறது. மற்ற சில நோய்களுக்கு மலர் மூலிகைகளை உட்கொள்வது தீர்வாகிறது. பூக்களில் இருக்கும் மூலிகைகள்தான், மலர் மருத்துவத்தின் முக்கிய மருந்துகள்.


லண்டனைச் சேர்ந்த அலோபதி மருத்துவரான டாக்டர் எட்வர்ட் பாச் நோய்களை முழுமையாக குணப்படுத்த வேண்டும் எனமுடிவு செய்தார்அலோபதி மருத்துவத்தை விட்டு, ஹோமியோபதிக்கு மாறினார். ஆனாலும் ஹோமியோபதியை  இன்னும் எளிமைப்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டார்

எட்வர்ட் பாச்சின் ஆராய்ச்சியில் 'எந்த ஒரு நோய்க்கும் மனமே காரணம்' என்ற உண்மை புலப்பட்டது. மனதைச் சரி செய்தால் பெரும்பாலான நோய்கள் குணமாகிவிடும் என்று உறுதியாக நம்பினார். இதையடுத்து, மனதை சரி செய்யும் மருந்துகளைத் தேடி மலைகள், காடுகள் என அலைந்தார். மூலிகைகளையும் மலர்களையும் பறித்து அவற்றை உண்டு பரிசோதனைகள் செய்தார். சில மலர்களைப் பயன்படுத்தியபோது அவர் சில மாற்றங்களை உணர்ந்தார். அந்த இழையைப் பிடித்துக்கொண்டு ஆராய்ச்சியை மேலும் தீவிரப்படுத்தினார். 

38 வகையான மலர் மருந்துகள் மனதை ஒழுங்குபடுத்த உதவியதாகக் கண்டுபிடித்து அவற்றை வரிசைப்படுத்தினார். மேலும், இந்த மலர் மருந்துகளை தனியாகவும் ஹோமியோபதி மருந்துகளுடன் சேர்த்தும் கொடுத்துப் பரிசோதித்து,  முறைப்படுத்தினார்.  இன்றைக்கு உலகம் முழுவதும் இந்த மலர் மருத்துவம் பரவி ஏராளமானோர் பயன்பெற்று வருகின்றனர் .என்றும் இதன் வரலாற்றை பகிர்ந்து கொண்டார்

மேலும்  கற்பகாம்பிகை  அவர்கள்  ஸ்வீட் செஸ்டட்கம் கார்ஸ் உட்பட 37 வகையான மலர்கள் ஒரு பாறையில் வடியும் நீரை வைத்தும் மனிதர்களின்  மனைதை சீராக வைக்கும் அளவிற்கு ஆலோசனை வழங்கிவருவதாக தெரிவித்தார்

 

உதாரணமாக ஒருவருக்கு ஊரடங்கால் தொழில் நட்டம் ஏறபட்டு அதை சமாளிப்பது குறித்த  பயம் இருந்தால் அதற்கேற்ப மலர்களை வைத்து ஆலோனசனைகள் வழங்குவதாக தெரிவித்தார்

கொரானா உத்வேகத்தில் இருந்தபோது இவருடைய மருத்துவ ஆலோனசனைகளை இலவசமாக கொரான  தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த முன் களப்பணியானர்கள்  பெற்றுக்கொணடு மனச்சோர்வின்றி பின் சிறப்பாக பணியாற்றினார்கன் எனவும் தெரிவித்தார்

மேலும் அவர்

 

ஒவ்வொரு மலருக்கும் ஒரு தனிச் சிறப்பு குணம் உண்டு. மலர்களின் நறுமணம், நிறம், அமைப்பு போன்றவை மனிதர்களுக்குக் காலம்காலமாகப் புத்துணர்வை வழங்கிவந்துள்ளன

. மேலும மலர்கள் உடல் ஆரோக்கியத்துக்கு எப்படி உதவும் என்பதே அவருடைய கண்டறிதல். உடல்நலக் கோளாறு என்பது மனதின் வெளிப்பாடே.

 மனதைச் சுகமான நிலையில் வைத்திருப்பதால், உடலும் சுகமடைகிறது என்பதே இதன் அடிப்படைத் தத்துவம். வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்கு இந்த மருத்துவம் உதவுகிறது.

ஒருவருடைய உடல் பகுதி பகுதியாக வலிக்கிறது என்றால், உடல் இறுக்கமடைந்துவிட்டதாகக் கொள்ளலாம். அப்படிப்பட்டவருடைய மனநிலையும் அதுபோலவே இருக்கும்.

சிலருக்கு எடுத்த பொருட்களை எடுத்த இடத்தில் வைக்காவிட்டால் கோபம் வரும். நேரத்துக்கு ஒரு வேலையை முடிக்காவிட்டால் பொறுக்க முடியாது. சுத்தம், நேரம் ஆகியவற்றைப் பராமரிப்பதற்காக அதிக நேரத்தையும், மனதையும் செலுத்தும் நபராக இருப்பார்.

 இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர், தன் மனதிடம் பிடிவாதமாக இருக்கிறார்.  அதுவே அவருடைய உடல் வழியாக, உறுப்புகளில் வலியாக வெளிப்படுகிறது.

இதற்கு ரா வாட்டர் மற்றும் பீச் என்னும் இரு மலர் மருந்துகள் உதவும். அதேநேரத்தில் வேலையும் நடக்கும். இறுக்க உணர்வை மனம் கைவிடும்.என்கிறார்

 

இவரின்  கிளினிக்



KYOCHI  

Health and Beautycare

ஆலோசனை மற்றும் தொடர்புக்கு

 எண்கள் : 9884152197./044 48590102  

செய்தி மற்றும் தகவல் :

எழில்நிலவன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,