`இனி ரயில்கள் நேருக்கு நேர் மோதாது!'

 

`இனி ரயில்கள் நேருக்கு நேர் மோதாது!' - இந்திய ரயில்வேயின் புதிய தொழில்நுட்ப சோதனை வெற்றிவிபத்தில்லா பயணம் என்ற திட்டத்தை இந்திய ரயில்வே செயல்படுத்த பல ஆண்டுகளாக சோதனையில் ஈடுபட்டது. அதன் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டதே இந்த கவச் (Kavach) என்ற தொழில்நுட்பம்.

இரண்டு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் நேராக வந்து மோதி பல விபத்துக்கள் நடந்துள்ளன. `விபத்தில்லா பயணம்' என்ற திட்டத்தை இந்திய ரயில்வே செயல்படுத்த பல ஆண்டுகளாக சோதனையில் ஈடுபட்டது. அதன் ஒரு பகுதியாக விபத்துக்களை தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டதே இந்த `கவச்' (Kavach) என்ற தொழில்நுட்பம். இது ஒரு தானியங்கி ரயில் மோதல் பாதுகாப்பு அமைப்பு.

இந்தத் தொழிநுட்பம் செகந்திராபாத்தில் சோதனை செய்யப்பட்டது. `கவச்' தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட இரண்டு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் நேராக விடப்பட்டது. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒரு ரயில் என்ஜினிலும், ரயில்வே வாரிய தலைவர் வி.கே.திரிபாதி இன்னொரு ரயில் என்ஜினிலும் இருந்து, இந்த சோதனை நிகழ்த்திக் காட்டப்பட்டது.

இந்த ரயில்கள் எதிர் எதிரே வரும்போது தாமாகவே 380 மீட்டர் இடைவெளியிலேயே நின்றுவிட்டது. இந்தச் செயல்முறை சோதனையின்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

ஆபத்தில் இருக்கும்போது அனுப்பப்படும் சிக்னலுக்கு ரயில் ஓட்டுநர் செயல்பட தவறும் பட்சத்தில், சிவப்பு சிக்னலைத் ரயில் தாண்டியவுடன் தானாகவே பிரேக் போடும். மேலும், இது ரயிலின் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தைவிட வேகமாகவும் இயங்க அனுமதிக்காது.

தற்போது இந்த கவச் தொழிநுட்பம் சோதனையில் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, டெல்லி - மும்பை, டெல்லி கொல்கத்தா மார்க்கத்திலும் இந்தத் தொழில்நுட்பத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது ரயில்வே துறை.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,