ஹே சினாமிகா
ஹே சினாமிகா
: அர்ஜென்டினிய காபினு சொல்றாங்க
. ஆனால், செய்த மாற்றங்கள் கைகொடுக்கின்றனவா?
'A Boyfriend for My Wife' என்கிற பிளாக்பஸ்டர் அர்ஜென்டினா படத்தைத் தமிழுக்கு அதிகாரபூர்வமாக இறக்குமதி செய்திருக்கிறார்கள். ஒரிஜினலின் பெயர், எழுதியவர் பெயர் எல்லாவற்றையும் முழு ஸ்லைடு போட்டதற்கு நன்றி. ரீமேக் படங்கள் எடுக்கும் பலரும் இதைப் பின்பற்றலாம். கதைமாந்தர்களின் பாலினத்தையும், காஜல் கதாபாத்திரத்தையும் மாற்றியிருக்கிறார்கள்.
படத்துக்கான கதை, திரைக்கதை , வசனம் எழுதியிருக்கிறார் மதன் கார்க்கி. நடன அமைப்பாளர் பிருந்தா முதல் முறையாக இயக்கியிருக்கிறார். எமோஷனல் காட்சிகள், கதை நகரும் விதம் எல்லாமே கதையுடன் பொருந்தி வருவதால் யாதொரு குறையுமில்லை. கோவிந்த் வசந்தா இசையில் மூன்று பாடல்கள் அட்டகாசம். பிரீத்தா ஜெயராமனின் ஒளிப்பதிவும், ராதா ஸ்ரீதர் படத்தொகுப்பும் கதையை சிறப்பாக நகர்த்த உதவியிருக்கிறது.
படத்தின் பிரச்னை காஜல் அகர்வாலின் பாத்திர வார்ப்பில் இருந்து தொடங்குகிறது. மூலக்கதையில் இருக்கும் கதாபாத்திரத்தின் தொழிலை மாற்றியது ஒரு பக்கம், இன்னொரு பக்கம் இந்தக் கதாபாத்திரம் தவறான நபர்களைப் பிரிக்கிறதா அல்லது சரியான நபர்களைப் பிரிக்கிறதா என்கிற குழப்பம் நமக்கு மட்டும் அல்லாது காஜல் அகர்வாலுக்கே வந்துவிடுகிறது. மன நல மருத்துவரா இல்லை ஒரிஜினலைப் போல 'Cassanova' கதாபாத்திரமா என்கிற கேள்வியும் உடன் தொத்திக்கொள்கிறது.
இது போதாதென, சோக காட்சிகளைத் தவிர பிற காட்சிகளில் எந்தவித எமோஷனலும் இல்லாமல் நடித்துக்கொடுத்திருக்கிறார் காஜல். அதனாலேயே இரண்டாம் பாதியில் தெரிந்த முடிவுக்கு ஏன் இவ்வளவு இழுவை என்றாகிவிடுகிறது. அதே போல், தவறு துல்கர் பக்கம் என்றால் ஏன் அதற்கும் அதிதி கசிந்துருகி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்கிற குழப்பமும் எழுகிறது. துல்கருக்கு இந்த வேலையை வாங்கிக்கொடுத்து இருந்தாலே எல்லா பிரச்னைக்கும் தீர்வு கிடைத்திருக்குமே என்கிற நிலையில் இதற்கு ஏன் இப்படியான சூன்யம் வைக்கும் காட்சிகள் எல்லாம் என யோசிக்க வைக்கிறது.
thanks
https://cinema.vikatan.com/
Comments