அவளே கண்டெடுத்தாள் ஆறாம் விரலாய்/கவிதை/மகளிர் தினம்2022,

 


தொலைந்து போன பால்யம் 

தூக்கி எரியப்பட்ட கனவுகள்

இளமையில் துரத்திய வறுமை

விதியென வாய்த்த வாழ்க்கை 

உரிமை இல்லா உறவுகள் 

உண்மை இல்லா உணர்வுகள்

புரிதல் இல்லா புணர்வுகள்

அடைகாக்கும் சமையலறை

அடுத்த சிறையாய் படுக்கையறை

அலுவலகத்தில் அசடுகள்

அங்கும் அக்னி பரீட்சை தான்

உடல்மொழி தனிக்கதை

உளவியலானது விடுகதை

பிள்ளை வளர்ப்பு பெருங்கதை

 குடும்பமது போர்க்களம்

சுயம் மறந்து நாட்களாக 

நட்புகள் ஏது சிந்தையில் 

பெரியாரும் பாரதியும்

பெருமூச்சிறைக்கச் செய்ய 

வாசிக்கப் பழகியவள் 

எழுதத் தொடங்கினாள் 

எழுத்துகள் தந்தது விடுதலை எண்ணங்களில் எழுச்சி

 வேர்களைத்தேடிய எழுத்தில் 

அவளை அவளே கண்டெடுத்தாள் 

ஆறாம் விரலாய் அவள் பேனாவும்

 அஞ்சாத அறமுறைத்தது.


பெண்களாய் வாழ்வதே சாதனை தான்

அனுதினம் உன்னை நீ கொண்டாடு🎊🎉

தீபிகா சுரேஷ் 


அனைத்து தேவதைகளுக்கும் மகளிர் தின வாழ்த்துகள்♥️


#தீபிகா_சுரேஷ் 

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்