பங்குனி உத்திரத்தின் சிறப்பு:

  பங்குனி உத்திரத்தின்  சிறப்பு:

தமிழ்க்கடவுள் முருகனை மனதில் நினைத்து வழிபடும் தினமே பங்குனி உத்திரம். தமிழ் மாதங்களில் 12வது மாதமான பங்குனியும், நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரமான உத்திரம் இவை இரண்டும் சேரும் நாள்தான் பங்குனி உத்திரம். அனைத்து மாதங்களிலும் உத்திரம் நட்சத்திரம் வருவதுண்டு. ஆனால் பங்குனி மாதத்தில் வருகின்ற உத்திரம் நட்சத்திரத்திற்கு என்று தனி சிறப்பு உண்டு. இந்த நன்னாளில் பக்தர்கள் முருகனுக்கு தேர் இழுத்தும், அபிஷேகம் செய்தும் அவர்களது வேண்டுதலின் நேர்த்திக்கடனை செலுத்திடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பங்குனி உத்திரம் 2022 தேதி 4/03/2022

பங்குனி உத்திரம் எப்போது? தேதி, நேரம் குறித்த தகவல்கள்...

 Panguni Uthiram 2022 |

பங்குனி மாதத்தில் வரக்கூடிய பெளர்ணமி தினமும், உத்திரம் நட்சத்திரமும் சேர்ந்து வரக்கூடிய நாளில் பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது.

தமிழ்க்கடவுள் முருகனை மனதில் நினைத்து வழிபடும் தினமே பங்குனி உத்திரம். தமிழ் மாதங்களில் 12வது மாதமான பங்குனியும், நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரமான உத்திரம் இவை இரண்டும் சேரும் நாள்தான் பங்குனி உத்திரம். அனைத்து மாதங்களிலும் உத்திரம் நட்சத்திரம் வருவதுண்டு. ஆனால் பங்குனி மாதத்தில் வருகின்ற உத்திரம் நட்சத்திரத்திற்கு என்று தனி சிறப்பு உண்டு. இந்த நன்னாளில் பக்தர்கள் முருகனுக்கு தேர் இழுத்தும், அபிஷேகம் செய்தும் அவர்களது வேண்டுதலின் நேர்த்திக்கடனை செலுத்திடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 பங்குனி உத்திரம் 2022 தேதி

பங்குனி உத்திரம் நாள்

பங்குனி 04ஆம் தேதி, மார்ச் 18 ( 18.03.2022) வெள்ளிக்கிழமை

 பங்குனி உத்திரம் வரலாறு:

 பங்குனி மாதத்தில் வரக்கூடிய பெளர்ணமி தினமும், உத்திரம் நட்சத்திரமும் சேர்ந்து வரக்கூடிய நாளில் பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது.

 இந்த திருநாளில் தான் சிவ பெருமான் - பார்வதி திருமணம், முருகன் -தெய்வானை, ராமன் - சீதை, ரங்கமன்னார் - ஆண்டாள் போன்ற தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றதாகப் புராணங்கள் குறிப்பிடுகின்றன.

 திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் பட்டாபிஷேகம், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் திருக்கல்யாணம், பிரசன்ன வேங்கடேஸ்வரர் குதிரை வாகனத்தில் எழுந்தருளுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் அற்புதமாக நடைபெறுகிறது.

 அதுமட்டுமல்லாமல் நாம் குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டிய முக்கிய நாள் பங்குனி உத்திரம்.  அதோடு மகாலட்சுமி, தர்ம சாஸ்தா, அர்ஜுனன் போன்றோர்கள் அவதரித்த தினமாக கருதப்படுகிறது.

 பங்குனி உத்திரத்தின்  சிறப்பு:

 திருமகள் கல்யாணசுந்தர விரதம் இருந்து திருமாலின் மார்பில் இடம்பிடித்த நாள். 

கலைமகளும் பிரம்மாவின் நாவில் இந்த நாளில்தான் அமர்ந்தாள். பார்க்கவ மஹரிஷியின் மகளாக மகாலட்சுமி, பார்கவி என்ற பெயரில் பூமியில் பிறந்த நாளும் பங்குனி உத்திர நாளில் தான்.

 உத்திர நட்சத்திரத்தில் கூடியிருக்கும் சந்திர பகவான் இந்த நன்னாளில் கலையுடன், கன்னி ராசியிலிருந்து களங்கமின்றி காட்சி தருவான். இந்த சமயத்தில் சந்திரனை வணங்கினால் குடும்பத்தில் ஏற்படும் சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதேபோல்

 வள்ளிப்பிராட்டி அவதரித்ததும், தர்ம சாஸ்தாவான ஸ்ரீஐயப்பன் உதித்ததும் இந்த நன்னாளில் தான்.

 பங்குனி உத்திரம் நாளன்று செய்யக்கூடிய சுபநிகழ்த்திகள்:

 பங்குனி உத்திரம் அன்று திருமண ஓலை எழுதுதல், தாலிக்கு பொன் உருக்குதல், சீமந்தம் செய்தல், புதிய பொருட்களை வாங்குதல், பூ முடித்தல், புதிய சிகிச்சை சொல்லுதல், செடி நடுதல், புதிய கோயிலில் சிலைகள் பிரதிஷ்டை செய்தல், வேலையில் சேருவது, வியாபாரம் தொடங்குவது, புதிய இடத்திற்கு மாறுவது, போர்ப் பயிற்சி மேற்கொள்வது மற்றும் நீர் நிலைகளை உருவாக்குவது போன்ற சுபகாரியங்களை செய்வதற்கு மிகவும் சிறந்த நாளாக பங்குனி உத்திரம் விளங்குகிறது.

எனவே இந்த நாளில் சுபநிகழ்ச்சிகளை மேற்கொள்ளும்போது அனைத்து காரியங்களும் நன்மையில் முடியும் என்பது நம்பிக்கை.
Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,