இப்படியொரு தக்காளி சட்னி

 

இப்படியொரு தக்காளி சட்னி அரைச்சா யாருக்கு தான் பிடிக்காம போகும்.

தோசைக்கு சரியான காம்போ என்றால் அது கார சட்னி தான்


பெரும்பாலான வீடுகளில் வேலைக்கு செல்லும் பெண்கள் காலையில் சமைக்கும் உணவு இட்லி தான். ஆய்வின் படி தோசையை விட இட்லி உடலுக்கு நல்லது எனவும் கூறப்படுகிறது. இட்லி, தோசையை விட அதற்கு ருசியாக தினம் தினம் வெரைட்டி சட்னி அரைப்பது தான் கொஞ்சம் கஷ்டமான வேலை. தேங்காய் சட்னி, கடலை சட்னி, கார சட்னி, புதினா சட்னி,கொத்தமல்லி சட்னி என 10 வெரைட்டியான சட்னியை விட்டால் வேற ரெசிபி இல்லை.

அதிலும் பலருக்கும் கார சட்னி என்றால் கொள்ளை விருப்பம். தோசைக்கு சரியான காம்போ என்றால் அது கார சட்னி தான். அந்த வகையில் இன்று பிரபல யூடியூப் சேனலான ’அபூர்வாஸ் நளபகம்’ சேனலில் இடம் பெற்றிற்கும் சூப்பரான கார சட்னி ரெசிபி எப்படி செய்வது என்பதை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். இதற்கு தேவையான பொருட்கள் மற்றும் செய்முறையை பார்க்கலாம் வாருங்கள்.தேவையான பொருட்கள் :

தக்காளி, வெங்காயம், பச்சை மிளாய், எண்ணெய், உப்பு, கடுகு, கொத்தமல்லி

செய்முறை:

1. முதலில் 8 தக்காளியை இட்லி பாத்திரத்தில் போட்டு வேக வைத்து கொள்ள வேண்டும்.

2. வேக வைத்த தக்காளியை தோல் நீக்கி மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

3. இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும்.

4, பின்பு நறுகிய வெங்காயம், பச்சை மிளாய் சேர்த்து வதக்கி அதில் தக்காளி கரைசலை சேர்க்க வேண்டும்.

Youtube Video

5. தேவையான அளவு உப்பு சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.

6. கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கினால் சூப்பரான தக்காளி சட்னி தயார்.

ஒருமுறை வீட்டில் இந்த ரெசிபியை செய்து பாங்கள் பிடிக்காதவர்கள் கூட இட்லியை தோசையை இந்த சட்னிக்காக விரும்பி சாப்பிடுவார்கள்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி