ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அவர்களின் பிறந்த நாள் இன்று

 


ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

அவர்களின் பிறந்த நாள் இன்று

 (Albert Einsteinமார்ச் 141879 – ஏப்ரல் 181955)

 

இவர் குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார்

. இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டை முன்வைத்ததுடன்குவாண்டம் எந்திரவியல் புள்ளியியற் எந்திரவியல் மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார்குவாண்டம் எந்திரவியல்,சார்புக் கோட்பாடு இரண்டும் நவீன விஞ்ஞானத்தின் இரு தூண்களாக கருதப்படுகிறது.ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும்கோட்பாட்டு இயற்பியலில் அவர் செய்த சேவைக்காகவும்

1921ல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

தற்காலத்தில் பொதுப் பயன்பாட்டில் ஐன்ஸ்டைன் என்ற சொல், அதிக புத்திக்கூர்மையுள்ள ஒருவரைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது

1999 ல், புதிய ஆயிரவாண்டைக் குறித்து வெளியிடப்பட்ட டைம் (இதழ்), "இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்" என்ற பெயரை ஐன்ஸ்டீனுக்கு வழங்கியது.

ஐன்ஸ்டைன் ஜெர்மனியில்வுர்ட்டெம்பர்க் இலுள்ள உல்ம் என்னுமிடத்தில், 1879 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையார், ஹேர்மன் ஐன்ஸ்டீன், பிற்காலத்தில் ஒரு மின்வேதியியல் (electrochemical) சார்ந்த தொழில் நிலையமொன்றை நடத்திவந்தார். தாயார் போலின் கோச். இவர் ஒரு கத்தோலிக்க ஆரம்பப் பாடசாலையில் சேர்க்கப்பட்டார். அத்துடன் தாயாரின் வற்புறுத்தல் காரணமாக இளமையில் வயலினும் கற்றுவந்தார். இவர் ஐந்து வயதாக இருந்தபோது, இவரது தந்தையார் இவருக்கு ஒரு சட்டைப்பையில் வைக்கக்கூடிய திசையறி கருவியொன்றைக் காட்டினார். அந்த வயதிலேயே அவர் ஒன்றுமற்ற வெளியில் ஏதோ ஒன்று காந்த ஊசியில் தாக்கம் ஏற்படுத்துவதைப் புரிந்துகொண்டார். அவர் மாதிரியுருக்களையும், இயந்திரக் கருவிகளையும், பொழுதுபோக்காகச் செய்துவந்தார். எனினும், சிறுவனாக இருந்தபோது இவருக்கு மிக மெதுவாகவே கற்கமுடிந்தது எனச் சிலர் கூறுகிறார்கள். இவர் தனது 12 ஆவது அகவையிலேயே கணிதம் படிக்க ஆரம்பித்தார். இவருடைய உறவினரிருவர் அறிவியல், கணிதம் தொடர்பான நூல்களையும், ஆலோசனைகளையும் கொடுத்து, அவரை ஊக்குவித்தார்களாம்.

,இவர்  இயற்கையில் புதைந்திருக்கும் ஏராளமான ரகசியங்களை வெளிக்கொண்டு வந்தவர் .

அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் நடந்து செல்லும் மனிதன், சாலையில் பயணிக்கும் கார், கடலில் செல்லும் கப்பல், வானத்தில் பறக்கும் விமானம், சூரியனைச் சுற்றும் கோள்கள், சுழன்று கொண்டிருக்கும் நட்சத்திரத் திரள்கள் என எல்லாவற்றின் இயக்கமும் சார்பானவை. தனித்தவை அல்ல. பார்வையாளர் அல்லது உணர்பவரின் இயக்கத்தைப் பொருத்து அவர் பார்க்கும் இயக்கமும் மாறுபட்டதாகத் தோன்றும் என்பதைத்தான் சார்பு நிலை என்கிறார்கள். இந்தச் சார்பு நிலையை பல கோட்பாடுகளால் விவரித்தவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஐசக் நியூட்டன், ஆர்க்கிமிடீஸ் போன்ற மிகச் சிறந்த விஞ்ஞானிகளுக்கு இணையாகப் போற்றப்படுபவர். கடந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியல் மேதை. உலகம் நம்பிக் கொண்டிருந்த பல விஞ்ஞானத் தத்துவங்களைத் உடைத்தெறிந்தவர்.

 

 

 

மனிதகுல வரலாற்றிலேயே மிகவும் புகழ்பெற்ற, சாதாரண மக்கள் வரை கேள்விப்பட்டிருக்கும் E = MC2 என்ற சூத்திரத்தை உருவாக்கியவர் ஐன்ஸ்டீன். 1921-ஆம் ஆண்டு இவர் பெற்ற நோபல் பரிசு, குவான்டம் விசையியல், ஒளிமின் விளைவு போன்றவை பற்றிய இவரது கண்டுபிடிப்புகளுக்காக வழங்கப்பட்டது. ஆய்ந்து பார்த்தால் இவர் அறிவியலுக்கு ஆற்றிய பணிகள் ஏராளம். கடவுள் அண்டத்தை உருவாக்கினார். பொருள்கள் இருந்தன. ஐன்ஸ்டீன் வந்து அவற்றின் மீது ஒளியைப் பாய்ச்சினார் என்று கூறும் அளவுக்கு அவர் வகுத்துத் தந்த கோட்பாடுகள் அறிவியல் உலகில் புரட்சியை ஏற்படுத்தின.

1879-ஆம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த ஐன்ஸ்டீன், குழந்தைப் பருவத்தில் மந்த புத்திக்காரராகவே அறியப்பட்டார். எந்தக் கேள்விக்கும் உடனடியாகப் பதிலளிக்க மாட்டார். அவசரமாகப் பதில்களை விரும்பும் ஆசிரியர்களுக்கு ஐன்ஸ்டீனைப் பிடிக்காது. பள்ளிகள் அவரைத் துரத்தின. இவருக்கும் வகுப்பறைகள் பிடித்திருக்கவில்லை. காந்த ஊசிகளை வைத்துக் கொண்டு பொழுதைப் போக்கிக் கொண்டிருப்பார். 16 வயதில் பாலிடெக்னிக் கல்லூரிக்கான நுழைவுத் தேர்வில் தோற்றுப் போனார். இருப்பினும் மேல்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்து மீண்டும் பாலிடெக்னிக் கல்லூரில் சேர்ந்தார். இயற்பியலும் கணிதமும் அவருக்கு விருப்பமான பாடங்களாக இருந்தன. இயற்பியலில் தொடர்ந்து ஆய்வுக் கட்டுரைகளை எழுதத் தொடங்கினார் அவையை ஐன்ஸ்டீன் டாக்டர் பட்டம் பெறுவதற்கு உதவின.

 

1905-ஆம் ஆண்டு ஐன்ஸ்டீன் வாழ்க்கையில் மட்டுமல்ல அறிவயில் உலகுக்கே அதிசயங்களை வழங்கிய ஆண்டு. ஒளிமின்விளைவு, பிரௌனியன் இயக்கம், சிறப்புச் சார்புக் கோட்பாடு, E=MC2 என்ற நிறை-ஆற்றல் சமநிலை விதி என இயற்பியல் உலகை அதிரவைத்த ஐன்ஸ்டீனின் பல முக்கியமான படைப்புகள் இந்த ஆண்டில்தான் வெளியாகின. ஐன்ஸ்டீன் ஒரு யூதர் என்பதால் ஒரு தரப்பு விஞ்ஞானிகள் இவரது கருத்துகளை கடுமையாக எதிர்த்தனர். மற்றொரு தரப்பினர் தங்களது பழைய கோட்பாடுகளில் இருந்து விலகி வருவதில் தயக்கம் ஏற்பட்டது. ஆனால் ஐன்ஸ்டீனின் கோட்பாடுகள் எல்லாம் வெவ்வேறு தருணங்களில் நிரூபணமாகின.

தொடர்ந்து பல கோட்பாடுகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டு வந்த ஐன்ஸ்டீனுக்கு உலகப் புகழ் கிடைத்ததுடன் பல புகழ்பெற்ற விஞ்ஞானிகளும் அவருடன் ஒருகிணைந்து பணியாற்ற முன்வந்தனர். போஸான் என்று குறிப்பிட்ட வகைத் துகள்களுக்கு பெயர் வருவதற்குக் காரணமான இந்திய விஞ்ஞானி சத்யேந்திர நாத் போஸும் அவர்களில் ஒருவர்.

ஜெர்மனியில் ஹிட்லர் அதிகாரத்தைக் கைப்பற்றியபோது, அமெரிக்காவில் இருந்த ஐன்ஸ்டீன் அதன் பிறகு நாடு திரும்பவே இல்லை. இந்த முடிவே இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவின் கை ஓங்குவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. ஜெர்மனியில் பேரழிவு ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாக, ஐன்ஸ்டீனின் ஒப்புதலுடன் அனுப்பப்பட்ட கடிதமே அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்டை புதிய வியூகத்தை வகுக்கச் செய்தது. அணுகுண்டுகள் தயாரிக்கப்பட்டன. அவற்றின் மூலமே போரின் முடிவுகள் மாறின.

அறிவியல் மட்டுமல்லாமல், அரசியல், சமூகம், தத்துவம், சேவை என பல துறைகளிலும் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றியவர் ஐன்ஸ்டீன். யூதர்களின் நலனுக்காகப் குரல் கொடுத்த அவர், தாம் ஒரு பொதுவுடமைவாதி என்று வெளிப்படையாக அறிவித்தார். ஆயுதத்தின் மூலமாக அமைதியை ஏற்படுத்த முடியாது, புரிதல் மட்டுமே அமைதிக்கான நிரந்தர வழி என்று கூறினார். அவரது அறிவியல் கருத்துகளை ஏற்றுக் கொண்ட வல்லரசுகள், அதற்குப் பின்னணியில் உள்ள அவரது தத்துவங்களை மட்டும் புரிந்துகொள்ளவில்லை.


,-.---- எழில் நிலவன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி