இயக்குனர் நாசர்
இயக்குனர் நாசர் அவர்களுக்கு அன்பான பிறந்த நாள்
வாழ்த்துக்கள்
இரண்டு ஆண்டுகளில் அவரது ' அவதாரம் ' திரைப்படத்தில் உதவி இயக்குநர்.
பின் 'தேவதை' யிலும் இணை இயக்குநராகப் பணியாற்றினேன்.
நான் இயக்கிய 'தித்திக்குதே' திரைப்படத்தில் நாயகனின் தந்தையாக நடித்தார்.
என் 'ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக்கூடம்' நூலுக்கு அன்பான அணிந்துரை எழுதிக் கொடுத்தார்.
அவரிடம் பணியாற்றிய மூன்றாண்டுகளில் பெரும்பாலும் அவர் வீட்டில்தான் சாப்பிட்டேன்.
அன்பு செலுத்துவதில் அன்னை. கற்றுக் கொடுப்பதில் ஆசிரியர். புகழ் சிறிதும் தலைக்கு ஏறாத உயர்ந்த மனிதர்.
எல்லோருக்கும் அவர் நடிகர் நாசர். எனக்கு அவர் இயக்குனர் நாசர் சார்.
Comments