ஒரு முடி விழுந்த இடத்தில், ஒரு கொத்து முடியை கடகடவென வளரச் செய்ய ‘கோகனட் மில்க் ஹேர் பேக்’

 ஒரு முடி விழுந்த இடத்தில், ஒரு கொத்து முடியை கடகடவென வளரச் செய்ய ‘கோகனட் மில்க் ஹேர் பேக்’

நிறைய பேருக்கு ஸ்கால்ப்பில் முடி கேப் விட்டு விட்டு இருக்கும். தலையை சீப்பை வைத்து சீவினால் கூட வழுக்கை தெரியும். அப்போது என்ன அர்த்தம். முடி விழுந்த இடத்தில் மீண்டும் முடி வளர வில்லை. அதேசமயம் நெருக்க நெருக்கமான முடி வளர்ச்சி இல்லை. முடி திக்காக வளர வில்லை. இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் ஒரு தீர்வு கிடைக்க சூப்பரான ஹேர் பேக்கை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். இந்த ஹேர் பேக்குக்கு நமக்கு தேவையான ஒரே ஒரு பொருள் தேங்காய். தேங்காய் இருந்தால் உங்கள் தலைமுடியை திக்காக வலுவாக நெருக்கமாக வளரச்செய்ய முடியும். அந்த ஹேர் பேக்கை எப்படி தயார் செய்வது தெரிந்துகொள்வோமா


முதலில் 1/2 மூடி அளவு தேங்காயை எடுத்து துருவி மிக்ஸியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு நன்றாக அரைக்க வேண்டும். அரைத்த இந்த தேங்காயை ஒரு வழிகாட்டியின் மூலம் வடிகட்டி எடுத்தால் திக்கான தேங்காய்ப்பால் நமக்கு கிடைக்கும். எந்த அளவில் உங்களுக்கு தேங்காய் பால் கிடைத்தாலும் சரி, அதை அப்படியே ஒரு கிண்ணத்தில் ஊற்றி மூடி போட்டு ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே வைத்து விடுங்கள். அதாவது 8 மணி நேரம் இந்த தேங்காய்ப்பால், அப்படியே இருக்கலாம். பிரிட்ஜில் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வெளியிலேயே வையுங்கள்.

எட்டு மணி நேரம் கழித்து இந்த தேங்காய் பாலை திறந்து பார்த்தால், தயிர் போல நமக்கு கிடைத்திருக்கும். அடியில் தண்ணீர் தங்கி இருக்கும். இதை போட்டு கரண்டியை வைத்து கலந்து விடக்கூடாது. அப்படியே ஒரு புளி வடிகட்டியில் இதை ஃபில்டர் செய்து கொள்ளுங்கள். தண்ணீர் அனைத்தும் வடிகட்டி விடும். மேலே கிரீமியா நமக்கு கோக்கனட் கிரீம் கிடைத்திருக்கும். இதுதான் நம் தலை முடிக்கு தேவையான கோக்கனட் க்ரீம் ஹேர் பேக்.

இதை அப்படியே உங்களுடைய ஸ்கால்ப்பில் அப்ளை செய்து கொள்ளுங்கள். மண்டை ஓட்டில் மயிர்க்கால்களில், வேர்ப்பகுதியில் இந்த கிரீம் நன்றாக பட வேண்டும். அதன் பின்பு முடியின் மேல் பக்கத்தில் இருந்து நுனிப்பாகம் வரை இந்த க்ரீமை அப்ளை செய்துவிட்டு, கொண்டை கட்டிக்கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் இந்த ஹேர் பேக் உங்கள் தலையிலேயே அப்படியே இருக்கட்டும்.


அதன் பின்பு ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து விடுங்கள். வாரத்தில் ஒருநாள் இந்த ஹேர் பேக்கை போடவேண்டும். வாரத்தில் இன்னொருநாள் அலோ வேரா ஜெல் ஹேர் பேக்கை போட வேண்டும். சாதாரணமாக இயற்கையாகக் கிடைக்கும் கற்றாழை ஜெல்லை எடுத்து உங்களுடைய தலை முழுவதும் அப்ளை செய்து, வெறும் பத்து நிமிடங்கள் ஊற வைத்து ஷாம்பு போட்டு அலச கொண்டால் கூட போதும்.


இந்த இயற்கையான அலோவேரா ஜெல்லில் முடி வளர்ச்சியை தூண்டி விடக்கூடிய சக்தி அதிகமாக உள்ளது. நாம் இப்படியாக தயார் செய்து வைத்திருக்கும் கோக்கனட் கிரீமில் முடியை வலிமை படுத்தக்கூடிய சக்தி அதிகமாகவே உள்ளது. இந்த இரண்டு டிப்ஸை மூன்று மாதங்களுக்கு விடாமல் முயற்சி செய்தாலே போதும். சூப்பரான முடி வளர்ச்சி இருக்கும். வாரத்தில் ஒருநாள் அலோ வேரா ஜெல் ஹேர் பேக். வாரத்தில் இன்னொரு நாள் கோக்கனட் க்ரீம் ஹேர் பேக்.courtesy:https://dheivegam.com/

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,