மசாலா இட்லி உப்புமா ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க.

 மசாலா இட்லி உப்புமா ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க.மீதமான இட்லியில் எல்லார் வீட்டிலும் உப்புமா செய்வது வழக்கம் தான். ஆனால் ஒருமுறை இப்படி மசாலா இட்லி உப்புமா செய்து பாருங்கள். இந்த இட்லி உப்மாவிற்கு ஒரு தனி சுவை இருக்கும். இட்லி உப்புமாவோடு சேர்த்து இட்லிக்கு தொட்டுக்கொள்ள சுவையான தேங்காய் சட்னி எப்படி அரைப்பது என்பதை பற்றியும் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த தேங்காய் சட்னி, நாம் வழக்கம்போல அரைப்பது கிடையாது. கொஞ்சம் வித்தியாசமானது. மிஸ் பண்ணாதீங்க இந்த இரண்டு ரெசிபியையும் நிச்சயம் ட்ரை பண்ணி பாருங்க.


மசாலா இட்லி உப்புமா: முதலில் 6 இட்லிகளை நன்றாக கட்டிகளில்லாமல் உதிர்த்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு அடுப்பில் அடி கனமான ஒரு கடாயை வைத்து கொள்ள வேண்டும். அதில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1 ஸ்பூன், உளுந்து – 1 ஸ்பூன், கடலைப் பருப்பு – 1/2 ஸ்பூன், வேர்க்கடலை – 1 டேபிள்ஸ்பூன், முந்திரி பருப்பு – 10, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 10 பல், கருவேப்பிலை – 1 கொத்து, இந்த பொருட்களை போட்டு நன்றாக வதக்கி விடுங்கள். பருப்பு அனைத்தும் பொன்னிறமாக சிவந்து வரட்டும்.

அதன்பின்பு சாம்பார் பொடி – 1 டேபிள்ஸ்பூன், தேவையான அளவு – உப்பு, மிளகுத் தூள் – 1/2 ஸ்பூன் சேர்த்து, ஒருமுறை கலந்துவிட்டு உதிரி உதிரியாக உதிர்த்து வைத்திருக்கும் இட்லியை கடாயில் உள்ள மசாலாவில் போட்டு அப்படியே கலந்து சுட சுட பரிமாறினால், அட்டகாசமான மசாலா இட்லி உப்புமா தயார்.


வித்யாசமான 5 மினிட்ஸ் தேங்காய் சட்னி: ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தேங்காய் துருவல் – 1/2 மூடி, பச்சை மிளகாய் – 3, புளி  சிறிய துண்டு, மல்லித்தழை – 1 கைப்பிடி அளவு, கறிவேப்பிலை – 2 கொத்து, மிளகு – 6, உப்பு – தேவையான அளவு, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை அப்படியே அரைத்துக் கொள்ள வேண்டும்

அரைத்த இந்த சட்னியை ஒரு சிறிய கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். ரொம்பவும் தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டாம். கொஞ்சம் திக்காக இருந்தால் சுவை கூடுதலாக கிடைக்கும். ஒரு தாளிப்பு கரண்டியில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம், தாளித்து இந்த சட்னியில் மணக்க மணக்க கொட்டி பரிமாறி பாருங்கள். இட்லி தோசைக்கு இதனுடைய சுவை வேற லெவல்ல இருக்கும்.


இட்லிக்கு தொட்டுக்கொள்ள சூப்பர் சட்னி, அந்த இட்லி மிஞ்சி விட்டால் சூப்பராக மசாலா இட்லி உப்புமா ரெசிபி. இந்த ரெண்டு ரெசிபிகள் உங்களுக்கு பிடித்திருந்தால் மிஸ் பண்ணாதீங்க உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க
Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,